திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம்
“சிரிப்பார்,களிப்பார், தேனிப்பார்,
திரண்டு,திரண்டு,உன் திருவார்த்தை
விரிப்பார்,கேட்பார்,மெச்சுவார்,
வெவ்வேறு இருந்துஉன் திருநாமம்
தரிப்பார்,‘பொன்னம்பலத்து ஆடும்
தலைவா’என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ?
நம்பி!இனித்தான் நல்காயே!”