Muralitharan K Profile Banner
Muralitharan K Profile
Muralitharan K

@muralijourno

15,655
Followers
844
Following
2,700
Media
5,400
Statuses

A journalist working with BBC writes on Politics, Social Justice, Archaeology, Literature and Movies.

Chennai
Joined March 2010
Don't wanna be here? Send us removal request.
@muralijourno
Muralitharan K
2 years
"ஒரு குழந்தை பிறந்து, தன் அடையாளத்தைக் கண்டு பயப்படும் நாள் இனி வராது என்று நம்புகிறேன். நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்": சாய் பல்லவி விளக்கம்.
Tweet media one
51
603
5K
@muralijourno
Muralitharan K
2 years
"தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. வீரமாமுனிவரின் சதுரகராதி 1732ல் வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. (1/10)
Tweet media one
255
873
3K
@muralijourno
Muralitharan K
2 years
புதுவரவு நண்பர்களே!
Tweet media one
Tweet media two
Tweet media three
79
61
3K
@muralijourno
Muralitharan K
2 years
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு நடந்து இன்றோடு 83 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பட்டியலினத்தோரும் நாடாரும் கோவிலுக்குள் நுழைந்ததால், கோவில் தீட்டுப்பட்டதாக கோவிலின் பட்டர்கள் அனைவரும் வெளியேறிவிட ஒருவர் மட்டும் ஆதரவாக நின்றார். அவரைப் பற்றிய விரிவான கட்டுரை.
Tweet media one
32
594
2K
@muralijourno
Muralitharan K
3 years
சிந்து சமவெளி மக்கள் பேசியது மூதாதை திராவிட மொழியே! - நேச்சர் ஆய்விதழில் அறிஞர் பஹதா அன்சுமாலி முகோபத்யாயின் விரிவான கட்டுரை.
Tweet media one
129
537
2K
@muralijourno
Muralitharan K
2 years
பொன்னியின் செல்வன் நாவலுக்கு அடிப்படை ஆதாரங்களாக அமைந்தவை இரண்டு புத்தகங்கள். ஒன்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்'. மற்றொன்று தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் 'பிற்கால சோழர் சரித்திரம் 1949'. இந்த இரண்டு நூல்களும் தமிழ் டிஜிட்டல் லைப்ரரியில் கிடைக்கின்றன.
Tweet media one
23
550
2K
@muralijourno
Muralitharan K
2 years
தெலுங்கில் வெளியாகியிருக்கும் Shyam Singha Roy ஒரு ஆச்சரியகரமான திரைப்படம். ஒரு சாதாரண மறுபிறவிக் கதையை, புரட்சிகரமான காட்சிகள், திரைக்கதையுடன் ஆச்சரியமளிக்கும் வகையில் முன்வைக்கிறது இந்தப் படம். Netflixல் இருக்கிறது. மிஸ் பண்ணாதீங்க. IMDB: 8/10
Tweet media one
21
255
2K
@muralijourno
Muralitharan K
2 years
கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரசில் வழங்கப்படும் இரவு உணவு: Roti, Shahi Paneer, Dal Dadka. பிற்பகல் சிற்றுண்டி: Fatafat bhel, Chanajor Garam. என்ன கொடுமை இது? ஏதாவது தமிழக உணவை வழங்கக் கூடாதா?
Tweet media one
Tweet media two
97
542
2K
@muralijourno
Muralitharan K
3 years
வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். இன்று அவரது நினைவு நாள். அவர் அமல்படுத்திய இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாக கருதும் யாரும் அவரை நினைவுகூர மாட்டார்கள். ஆனால், அதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரை நினைவுகூர்வது அவசியம்.
Tweet media one
15
500
2K
@muralijourno
Muralitharan K
2 years
ரொம்ப நாளைக்கப்புறம்…
Tweet media one
16
339
2K
@muralijourno
Muralitharan K
3 years
This is not Paris, this is Parrys.
Tweet media one
25
109
2K
@muralijourno
Muralitharan K
2 years
பொன்னியின் செல்வன் நாவலின் கதைச் சுருக்கத்தை மூன்றே பாகங்களில் பிபிசி உங்களுக்கு வழங்குகிறது. லிங்கை க்ளிக் செய்து வாசியுங்கள்.. Part 1: Part 2: Part 3:
Tweet media one
12
688
2K
@muralijourno
Muralitharan K
2 years
ஒரு தமிழ் கடிகாரத்தின் கதை ------------------------------------------ இந்தியாவில் ஒரு காலத்தில் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் மட்டுமே கடிகாரங்களைத் தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது. சிறிய நிறுவனங்கள் உள்ளூர் அளவில் தயாரித்துக்கொள்ளலாம். (1/12)
Tweet media one
51
584
2K
@muralijourno
Muralitharan K
2 years
'ஜன கன மன' திரைப்படம் சென்னையில் வெளியானபோது வெகு சில திரையரங்குகளில் மலையாளத்தில் மட்டும் வெளியானது. அதுவும் வசதியில்லாத நேரங்களில் காட்சிகள் இருந்தன. இப்போது Netflixல் தமிழிலும் வெளியாகியிருக்கிறது. (1/10)
Tweet media one
28
311
2K
@muralijourno
Muralitharan K
3 years
ஸ்கூல் வாட்ஸப் க்ரூப்ல என்னையப் பார்த்தா, நைஸா ஓரமா போறானுக.. டேய் வாங்கடா.. இன்னைக்கு ஒன்னும் கேக்க மாட்டன்டா..
18
95
2K
@muralijourno
Muralitharan K
3 years
முதலமைச்சராக சி.என். அண்ணாதுரை பிபிசிக்கு பேட்டியளித்தபோது. இடம், புஷ் ஹவுஸ், லண்டன்.
Tweet media one
Tweet media two
5
207
2K
@muralijourno
Muralitharan K
2 years
சென்னை நேப்பியர் பாலம் அட்டகாசமாக இருக்கிறது! #ChennaiChess2022 #44chessolympiad
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
173
1K
@muralijourno
Muralitharan K
3 years
அண்ணாத்தேவின் க்ளைமாக்ஸில் வில்லனின் ஆட்கள் தாறுமாறாக அடிபட்டு கிடக்கும்போது, கீர்த்தி சுரேஷ் ஒவ்வொருவரிடமாக சென்று, "யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா" என்று கேட்பார். அந்தக் கேள்வி, நம்மைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. #Annaththe
Tweet media one
64
173
1K
@muralijourno
Muralitharan K
4 years
பேராசிரியர் தொ. பரமசிவன் காலமானார். மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு தமிழ் கற்பித்தவர். எனது ஆளுமையின் ஒரு பகுதியை உருவாக்கியவர் அவர். தாங்கவே முடியவில்லை.
Tweet media one
13
152
1K
@muralijourno
Muralitharan K
2 years
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் சதவீதம் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. 92 சதவீதம்.
Tweet media one
16
245
1K
@muralijourno
Muralitharan K
1 year
------------------------------------- அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் சமீபத்திய படமான 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. (1/15)
Tweet media one
26
184
1K
@muralijourno
Muralitharan K
3 years
என்னாச்சின்னா மக்களே, verification வந்துட்டு!!
Tweet media one
28
18
1K
@muralijourno
Muralitharan K
11 months
வைகை என்ற கனவு ரயில் ------------------------ 47 வருடங்களாக ஒரு ரயில், iconic ரயிலாக இருக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறது வைகை எக்ஸ்பிரஸ். 1977ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயிலுக்கு இன்றோடு வயது 47. (1/7)
Tweet media one
24
244
1K
@muralijourno
Muralitharan K
2 years
வி.பி. சிங் என்றொரு மீட்பர் --------------------- குறுகிய காலமே இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். இன்று அவருடைய நினைவு நாள். அவரைப் பற்றி சில சம்பவங்கள். (1/14)
Tweet media one
13
360
1K
@muralijourno
Muralitharan K
2 years
"நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்": வி.பி. சிங் ----------------------------------------------------- இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியவருமான விஸ்வநாத் பிரதாப் சிங்கின் 92வது பிறந்த நாள் இன்று. (1/24)
Tweet media one
9
248
1K
@muralijourno
Muralitharan K
3 years
"இது போன்ற விளம்பரங்களும் கருத்துக் கணிப்புகளும் வாக்காளர்களிடம் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள். மாறாக இதனால் பத்திரிகைகள் மீதான நம்பகத்தன்மை குறையும்" - என். ராம் பேட்டி.
Tweet media one
18
304
1K
@muralijourno
Muralitharan K
3 years
"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டும்" - இன்று வெளியான தமிழக தொல்லியல் ஆய்வு முடிவுகள் குறித்த விரிவான கட்டுரை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
308
1K
@muralijourno
Muralitharan K
2 years
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
Tweet media one
1
65
1K
@muralijourno
Muralitharan K
3 years
"திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு சன்னிதி உண்டு. பெருமாளுக்கு லுங்கி கட்டி ரொட்டி நைவேத்தியம் செய்கிறார்கள். பெருமாளே இஸ்லாமியர்களை ஏற்கிறார், இவர்கள் ஏன் தடுக்கிறார்கள்? பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் வந்து நிற்க இவர்கள் யார்?"
Tweet media one
32
252
1K
@muralijourno
Muralitharan K
2 years
NCERT பாடத் திட்டத்தில் இருந்து 2002 குஜராத் கலவரம் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. குஜராத் கலவரத்தை NCERT புத்தகங்களில் இருந்து நீக்குவதன் மூலம் வரலாறு மாறிவிடுமா என கேள்வி எழுப்புகிறது பிபிசி குஜராத்தியின் செய்தியாளர் ராக்ஸியின் விரிவான கட்டுரை.
Tweet media one
11
342
1K
@muralijourno
Muralitharan K
2 years
இந்திய ராணுவத்தில் எந்த மாநிலத்திலிருந்து அதிகம் இணைகிறார்கள்?
Tweet media one
63
250
1K
@muralijourno
Muralitharan K
2 years
14.08.1947ஆம் தேதி நள்ளிரவு பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். இந்தியா எப்படியிருக்க வேண்டும் என்ற அவரது கனவின் எழுத்து வடிவம் அது. உலகின் மிக சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று. A Tryst With Destiny என்ற அந்த உரையை இங்கே தமிழில் படிக்கலாம்.
Tweet media one
4
386
1K
@muralijourno
Muralitharan K
1 year
மாமன்னன் படத்திலிருந்து வெளியாகியிருக்கும் 'மலையிலதான் தீப்பிடிக்குது ராசா.. மனசுக்குள்ளே வெடி வெடிக்குது ராசா..' பாடல் ஒரு தனித்துவமிக்க அட்டகாசமான பாடல். நல்ல நடிகரான வடிவேலு ஒரு நல்ல பாடகரும்கூட. ஒரு தேர்ந்த நாட்டுப்புற பாடகருக்கு ஏற்ற குரல் வளத்தைக் கொண்டவர். (1/3)
Tweet media one
10
92
1K
@muralijourno
Muralitharan K
10 months
ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும், யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென்று சாதாரண பொதுமக்களிடம், அந்த பட்ஜெட் பற்றிக் கேட்டால் அறியாமையே பதிலாகக் கிடைக்கும். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வேறு மாதிரி இருந்தது. (1/9)
Tweet media one
11
299
1K
@muralijourno
Muralitharan K
2 years
"படிக்காமல் சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவதல்ல; வெறும் ஆசை வார்த்தை..." - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Tweet media one
9
195
1K
@muralijourno
Muralitharan K
1 year
பரபரப்பாக பேசப்பட்ட ஒரு சம்பவத்தை உடனடியாக திரைப்படமாக்க ஒரு துணிச்சல் வேண்டும். Sirf Ek Bandaa Kaafi Hai (ஒரே ஒருவன் போதும்) படத்தை உருவாக்கியவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது. வட இந்தியாவில் ஆசாராம் பாபு என்று ஒரு பிரபல சாமியார் இருந்தார். (1/8)
Tweet media one
7
173
1K
@muralijourno
Muralitharan K
2 years
1857ஆம் ஆண்டின் எழுச்சி முடிவுக்கு வந்திருந்த நேரம். தில்லியின் அரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் வேகமாக தில்லி செங்கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அவரது பல்லக்கு போன்ற நாற்காலியைத் தூக்கிவந்த சிலரைத் தவிர, வேறு யாரும் உடல் வரவில்லை. அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்தார். (1/19)
Tweet media one
25
279
1K
@muralijourno
Muralitharan K
3 years
இவ்வளோ பெரிய ஃபேனை இப்பதான் பார்க்குறேன்.. மதுரை தியாகராசர் கல்லூரி.
Tweet media one
112
39
1K
@muralijourno
Muralitharan K
2 years
2021ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலின் செயலரான ஹேமசபேச தீட்சிதர் தன் 13 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். அப்போது மாப்பிள்ளைக்கு வயது 15. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். புகாரைப் பெற்ற காவல்துறை..... (1/2)
Tweet media one
32
321
991
@muralijourno
Muralitharan K
2 years
மூத்த பத்திரிகையாளரான டி.ஜே.எஸ். ஜார்ஜ் The Dismantling of India என்ற புத்தகத்தில், இந்தியாவை மிகவும் பாதித்த 35 இந்தியர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். ஜே.ஆர்.டி. டாடா, மகாத்��ா காந்தி, நேரு, இந்திரா, அப்துல்கலாம் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. (1/6)
Tweet media one
12
259
973
@muralijourno
Muralitharan K
2 years
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஒரு கூட்டத்தை சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் ஈக்வாலிடி லேப்ஸ் என்ற..... (1/4)
Tweet media one
19
278
940
@muralijourno
Muralitharan K
2 years
இப்போது ஒரு மணி. புயல் கரையைக் கடந்துகொண்டிருப்பதால் கடுமையாகக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலும் இதைச் செய்கிறார்கள். இடம்; அசோக் நகர்.
Tweet media one
11
158
946
@muralijourno
Muralitharan K
11 months
ஜெயிலர் திரைப்படத்தில் வரும் சிலை கடத்தல்காரர் மிகக் கொடூரமான கொலைகளைச் செய்பவராக, சுரங்கம் போன்ற இடத்தில் வசித்தபடி அமிலத்தில் ஆட்களை ஊறவைத்துக் கொலைசெய்பவராக வருகிறார். உண்மையில் சிலை கடத்தல்காரர்கள் எப்படியிருந்தார்கள்? (1/7)
Tweet media one
22
192
932
@muralijourno
Muralitharan K
8 months
திரையரங்குகளில் வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த Kannur Squad இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிவிட்டது. மலையாளத் திரைப்படங்களில் ஒரு பெரிய சாகசத்தைச் சொல்லப் போகிறார்கள் என்றால், முதலில் ஒரு சிறிய சாகசத்தைக் காட்டுகிறார்கள். (1/8)
Tweet media one
20
61
920
@muralijourno
Muralitharan K
3 years
கீழடியை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மீண்டும் சென்னை பிராந்தியத்திற்கு திரும்புகிறார். தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரும் மகிழ்ச்சி.
Tweet media one
6
105
876
@muralijourno
Muralitharan K
3 years
தமிழின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் சேர்கிறது, இந்த "ஜெய் பீம்". முழு விமர்சனம்: @Suriya_offl @tjgnan @RSeanRoldan @jose_lijomol @PrimeVideoIN #JaiBhimOnPrime
Tweet media one
2
262
857
@muralijourno
Muralitharan K
3 years
காந்தி சொல்லியே சாவர்க்கர் மன்னிப்பு கடிதங்களை எழுதியதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1911, 1913, 1914, 1918, 1920 ஆண்டுகளில் இந்த கடிதங்கள் எழுதப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி 1915ல்தான் இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tweet media one
18
297
856
@muralijourno
Muralitharan K
3 years
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த 3 பேர் 14ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதாக புகார். இவர்களை நேற்றுதான் கைதுசெய்ததாக காவல்துறை கூறுகிறது. கைதுசெய்யப்பட்ட மூவரில் 2 பேர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒருவரது நிலை தெரியவில்லை.
Tweet media one
Tweet media two
Tweet media three
14
423
846
@muralijourno
Muralitharan K
2 years
இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை: வதந்திகள இன்னும் வேகமா பரப்பலாம்... :)
Tweet media one
4
160
833
@muralijourno
Muralitharan K
3 years
சமீபத்தில் வெளிவந்த Dravidian Model புத்தகத்தில் மாநில சுகாதாரக் கட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து Democratizing Care என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே: (Thread) 1/10
21
422
806
@muralijourno
Muralitharan K
3 years
தமிழ்நாட்டின் ஏழு இடங்களில் மாநில தொல்லியல் துறையால் அகழாய்வு நடந்துவருகிறது. ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பது குறித்து ஒரு விரிவான கட்டுரை. @TThenarasu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
233
810
@muralijourno
Muralitharan K
2 years
வளைகுடா யுத்தத்தின்போது குவைத்திலிருந்த 1,11,000 பேரை மீட்டது இந்திய அரசு. அப்போது பிரதமர் வி.பி. சிங். லெபனான் யுத்தத்தின்போது சுமார் 2,800 பேரும் லிபிய உள்நாட்டுப் போரின்போது 15,000 பேரும் மீட்கப்பட்டனர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங். விரிவான கட்டுரை.
Tweet media one
9
331
791
@muralijourno
Muralitharan K
2 years
கன்னடத் திரையுலம் மின்னுகிறது. போன வருடம் ராஜ் பி. ஷெட்டியின் 'கருட கமன ரிஷப வாகனா'. இந்த ஆண்டு ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா'. கடந்த ஐந்தாண்டுகளாகவே கன்னடத் திரையுலகம் வெகுவாக மாறியிருக்கும் நிலையில், Kantara திரைப்படம் அதன் உச்சம் என்று சொல்லலாம். (1/9)
Tweet media one
12
120
798
@muralijourno
Muralitharan K
3 years
வயர் தட்டி கேட்ச் பிடிச்சா செல்லாதாம். சந்து கிரிக்கெட்டே பரவாயில்ல…
Tweet media one
6
31
788
@muralijourno
Muralitharan K
3 years
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொழிலதிபர் அதானிக்கு இருக்கும் நெருக்கம், இதன் மூலம் அதானிக்கு கிடைத்த சலுகைகள், அதனால் அவரது நிறுவனம் அடைந்த வளர்ச்சி ஆகியவை குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது பிபிசி. விரிவான கட்டுரை. படித்துப் பாருங்கள்.
Tweet media one
12
416
762
@muralijourno
Muralitharan K
1 year
அதானியை வீழ்த்திய ஹிண்டன்பர்க் நிறுவனம்: எளிய விளக்கம் -------------------------- இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதியை இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான கௌதம் அதானி மறக்கவே மாட்டார். அவர் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை அன்றைக்குத்தான் வெளியானது. (1/11)
Tweet media one
8
182
755
@muralijourno
Muralitharan K
2 years
மாதவிடாய் காலத்தில் துணிகளைப் பயன்படுத்துவோர் சதவீதம், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. வெறும் 12.7 %. தலைநகர் தில்லியைவிட இது குறைவு. உத்தரப்பிரதேசத்தில் 69.4 %. பிஹாரில் 67.5 %. குஜராத்தில் 51.5%. Source: NFHS 2019-21. Age Group: 15-24.
Tweet media one
21
318
751
@muralijourno
Muralitharan K
3 years
100 நாள் வேலை மனித உழைப்பை வீணடிப்பதாகவும் இதனால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகவும் சீமான் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த திட்டம் விவசாயத் தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியை அதிகரித்திருப்பதாக Jean Derezம் அமர்த்தியா சென்னும் குறிப்பிடுகின்றனர். விரிவான கட்டுரை.
Tweet media one
52
290
743
@muralijourno
Muralitharan K
1 year
"இவ்வளவு துணிச்சலாக எடுக்கிறார்களே, இந்தப் படமெல்லாம் திரையரங்குகளில் வெளியாக முடியுமா?" என்று சில படங்களைப் பார்த்தால் தோன்றும். அந்த மாதிரி ஒரு படம்தான் Afwaah. வதந்தி என்று இதற்கு அர்த்தம். ராஜஸ்தானின் சாவல்பூர் என்ற இடத்தில் நடக்கிறது கதை. (1/9)
Tweet media one
12
157
757
@muralijourno
Muralitharan K
3 years
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, முக்கியமான வழக்குகள் குறித்து எழுதி வருகிறேன். இந்த வாரம் Indira Sawhney vs Union of India வழக்கு. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
Tweet media one
11
169
747
@muralijourno
Muralitharan K
3 years
சிந்து வெளி மக்கள் பேசியது தொல் திராவிட மொழி என சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியானது. அந்த ஆய்வின் அடிப்படையில் பிபிசியில் வெளியான கட்டுரை இது. சிந்துவெளியின் பல்வேறு புதிர்களுக்கும் இந்தக் கட்டுரையில் ஓரளவுக்கு விடை இருக்கிறது.
Tweet media one
10
195
746
@muralijourno
Muralitharan K
2 years
தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. "நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். உங்களோடு ஒரே நாடாக இருக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு" என்ற புகழ்பெற்ற முழு உரையைப் படிக்க:
Tweet media one
7
170
738
@muralijourno
Muralitharan K
1 year
பாச்சுவும் அத்புத விளக்கும் ------------------------ ரொம்ப நாட்களுக்குப் பிறகு மலையாளத்திலிருந்து ஒரு முழு நீள feel - good திரைப்படம். பிரசாந்த் என்ற பாச்சு, மும்பையில் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக்கு பிரான்சைசி எடுத்து நடத்திவருகிறான். 34 வயசாகியும் கல்யாணம் ஆகவில்லை. (1/7)
Tweet media one
18
90
735
@muralijourno
Muralitharan K
3 years
பெரியாரை அறிய விரும்புபவர்கள் தமிழ் சிந்தனை வரலாற்று ஆய்வாளரான பழ. அதியமான் எழுதிய 'சேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்', 'வைக்கம் போராட்டம்' ஆகிய இரண்டு நூல்களும் மிக முக்கியமானவை. பல ஆண்டுகால உழைப்பில் உருவானவை. கண்டிப்பாக படிக்கப்பட வேண்டியவை.
Tweet media one
Tweet media two
13
146
716
@muralijourno
Muralitharan K
3 years
ஜெய் பீம் குறித்து பிபிசியின் ஆங்கில சேவையில் வெளியான கட்டுரை. #JaiBhim
5
259
694
@muralijourno
Muralitharan K
1 year
ரஷ்யாவில் என்ன நடக்கிறது? தனியார் ராணுவம் மாஸ்கோவை நெருங்குகிறதா? ---------------------- ரஷ்யாவில் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் உலகம் முழுவதையும் அந்நாட்டை நோக்கி திருப்பியுள்ளன. இப்போது அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். (1/9)
Tweet media one
14
118
710
@muralijourno
Muralitharan K
3 years
உத்தரப்பிரதேச சாலைகளில் மதியம் நடப்பதைப்போல கொடூரம் வேறில்லை. 120 டிகிரி வெயில், தூசி... தாகம்..
Tweet media one
22
28
680
@muralijourno
Muralitharan K
2 years
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் CEO சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் SEBI தெரிவித்துள்ளது. இது குறித்த பிபிசியின் விரிவான கட்டுரை:
Tweet media one
28
296
688
@muralijourno
Muralitharan K
1 year
2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய "Journey of a Civilization: Indus to Vaigai" நூல் வெளியானபோது தொல்லியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. The Hindu, Outlook, Frontline, உள்ளிட்ட ஊடகங்களில் இதற்கான மதிப்புரைகள் வெளிவந்தன. (1/15)
Tweet media one
16
190
690
@muralijourno
Muralitharan K
9 months
பல விருதுகளைப் பெற்ற திரைப்படம் என்ற அறிமுகத்தோடு, சோனி லைவில் வெளியாகியிருக்கிறது கூழாங்கல் திரைப்படம். மதுரை மாவட்டம் யானை மலையை ஒட்டியுள்ள ஒரு கிராமம். குடிகாரனான கணவனை விட்டுவிட்டு, மனைவி தன் தாய் வீட்டிற்குப் போய்விடுகிறாள். (1/7)
Tweet media one
14
58
679
@muralijourno
Muralitharan K
3 years
"பிராமண பூசகர்கள் எங்களுக்கு பயிற்சி அளிக்க மறுத்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா என்ற பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது" - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது எப்போது?
Tweet media one
2
150
672
@muralijourno
Muralitharan K
3 years
உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான கிராமப்புரங்களில் 8 முதல் 10 மண் நேரம் மின்சாரமில்லை. நகர்ப்புரங்களில் குறைந்தது 4 மணிநேரம் மின்சாரமில்லை.
Tweet media one
30
161
659
@muralijourno
Muralitharan K
1 year
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேட்டைக் கொண்டு வரும் வகையில் 'One Nation, One Organ Allocation' ("ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு") என்ற திட்டத்தை இந்திய சுகாதாரத் துறை வகுத்து வருகிறது. (1/4)
Tweet media one
19
328
664
@muralijourno
Muralitharan K
1 year
விலங்குகளுடன் sex வைத்துக் கொள்வதை ஆங்கிலத்தில் Beastiality என்கின்றனர். மிருகத்துடன் புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. இது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு IPC 377வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். (1/5)
Tweet media one
26
92
655
@muralijourno
Muralitharan K
3 years
The Hinduவின் வாசகர் தரப்பு ஆசிரியரான ஏ.எஸ். பன்னீர்செல்வன் எழுதிய 'Karunanidhi: A Life' பென்குயின் வெளியீடாக வெளியாகியிருக்கிறது. கருணாநிதி குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் நேர்மறையான பார்வையில் வெளிவந்த ஆங்கில புத்தகங்கள் மிகக் குறைவு. @CholamandalPann 1/3
Tweet media one
10
187
650
@muralijourno
Muralitharan K
10 months
2017ல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள BRD மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து போய் 80 நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த நிகழ்வின்போது அக்கம்பக்கம் இருந்த மருத்துவமனைகள், சப்ளையர்களிடமிருந்து ஆக்ஸிஜனைக் கொண்டுவந்து அவர்களைக் காப்பாற்ற முயற்சித்த டாக்டர் கஃபீல் கானை... (1/3)
9
247
651
@muralijourno
Muralitharan K
2 years
பாலமேடு ஜல்லிக்கட்டில் அன்னலட்சுமி என்ற பெண்ணும் தன் காளையை இறக்கியிருந்தார். களத்தில் நின்று காளையை உற்சாகப்படுத்தவும் செய்தார். அந்த மாடு பிடிபடவில்லை. அன்னலட்சுமிக்கு பரிசளிக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் அட்டகாசமாக இருந்தன.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
51
630
@muralijourno
Muralitharan K
2 years
சென்னையில் புரொஃபஷனல் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். நெருக்கடி நிலையின் போது பொதுப் பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது ஒரு aberration என்றார்.
Tweet media one
19
106
627
@muralijourno
Muralitharan K
3 years
"தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு குறைந்து வருகிறது. 2026ல் நாடாளுமன்ற இடங்களைத் திருத்தும்போது தமிழ்நாட்டிற்கு 45 இடங்கள் என ஆக்கிவிட்டு, உ.பிக்கு 160 இடங்கள் அளிக்கப்பட்டால் தென் மாநிலங்களின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியும்.": ஆனந்த் ஸ்ரீநிவாஸன்
Tweet media one
12
208
613
@muralijourno
Muralitharan K
5 years
"தமிழ் சங்க காலம் இன்னும் பழமையானது" ---------------------------------- கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி 2600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் முடிவுக்கு தொல்லியில் துறை வந்துள்ளது.
3
272
611
@muralijourno
Muralitharan K
1 year
சில மாத இடைவெளிக்குள் ஜெயமோகன் எழுதிய இரண்டு சிறுகதைகள் படமாக வெளிவந்திருக்கின்றன. ஒன்று கைதிகள், மற்றொன்று துணைவன். கைதிகள் கதை, ரத்த சாட்சியாகவும் துணைவன் விடுதலையாகவும் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த இரு கதைகளையும் படித்துவிட்டு, படத்தைப் பார்த்தால்,... (1/8)
Tweet media one
10
83
596
@muralijourno
Muralitharan K
1 year
வட இந்தியாவில் நிலவும் ஆணாதிக்கம், ஜாதி ஒடுக்குமுறையை பின்புலமாக வைத்து, ஒரு பெண் காவல்துறை அதிகாரியை மையப் பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியஸ் த்ரில்லராக Dahaadஐச் சொல்லலாம். இதே அம்சங்களோடு நகைச்சுவை த்ரில்லராக உருவான படம்தான் Kathal - கட்ஹல். (பலாப்பழம்). (1/8)
Tweet media one
9
60
589
@muralijourno
Muralitharan K
2 years
பழைய இந்தியா டுடே இதழ்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது இந்த இதழின் அட்டை (ஜூலை 1, 2009) படம் கருத்தைக் கவர்ந்தது. அந்தத் தருணத்தின் நம்பிக்கைமிகுந்த, மகிழ்ச்சியான, உற்சாகமான தேசத்தின் பொது மனநிலையை இந்த அட்டை பிரதிபலிக்கிறது.
Tweet media one
14
130
593
@muralijourno
Muralitharan K
3 years
அமெரிக்காவில் முன்பு அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஒரு கதாநாயகன் போல மோதி கொண்டாடப்பட்டார், அவர் அப்போது நடத்தப்பட்ட விதத்துக்கும் இப்போதைக்கும் பல மாற்றங்கள் உள்ளன என்கிறது Los Angeles Times. இது குறித்து பிபிசியில் வந்த கட்டுரை:
Tweet media one
10
121
575
@muralijourno
Muralitharan K
3 years
இன்று குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழக முதல்வர் மனோகர் தேவதாஸ் எழுதி, வரைந்த நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளார். மதுரை வடக்கு மாசி வீதிகாரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
65
578
@muralijourno
Muralitharan K
1 year
மலையாளத்தில் வெளிவரும் த்ரில்லர் திரைப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகிவிட்ட நிலையில், மலையாள இயக்குநர்கள் மேலும் கொடூரமான த்ரில்லர்களை யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒரு த்ரில்லர்தான் Ela Veezha Poonchira. இலைகள் வீழாத பூக்களின் குளம் என்று அர்த்தம். (1/16)
Tweet media one
16
88
574
@muralijourno
Muralitharan K
2 years
Rotten Tomatoesன் விருது ஆசிரியர் கணிப்பு.
2
206
546
@muralijourno
Muralitharan K
2 years
தமிழ்நாட்டில் சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த 250-300 ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார்கள், அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள், அவர்கள் ஆட்சி எப்படியிருந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது. ஆகவே, அது இருண்ட காலமாக அழைக்கப்பட்டது.
Tweet media one
5
94
560
@muralijourno
Muralitharan K
2 years
"மிக்ஸி, கிரைண்டர் போன்றவை பெண்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் என்று கருதி கொடுத்தால், அவற்றைக் கொடுக்கக்கூடாது, பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று சொல்வது என்ன லாஜிக்?' மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனின் விரிவான பேட்டி:
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
129
523
@muralijourno
Muralitharan K
2 years
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன? சமீபத்திய ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியா பிரிட்டனை முந்தியது. (1/6)
Tweet media one
9
218
534
@muralijourno
Muralitharan K
2 years
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த மேலும் பல படங்களை நாஸா வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு படத்தின் பின்னணியும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இந்த பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு தூசாகக்கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவனது சாதனைகள் மகத்தானவை. ஒவ்வொரு படத்தை பற்றியும் தனித்தனியே எழுத வேண்டும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
89
532
@muralijourno
Muralitharan K
2 months
சமீப காலத்தில் நெட்ஃப்ளிக்ஸில் இறங்கியிருக்கும் மற்றொரு அட்டகாசமான படம் Chamkila. 1980களில் பஞ்சாபில் அமர் சிங் சம்கீலா என்றொரு பாடகர் இருந்தார். அவருடைய பாடல்களுக்கு பஞ்சாபே மயங்கிக் கிடந்தது. ஆனால், அங்கிருந்த சிலருக்கு அது பிடிக்கவில்லை. (1/9)
Tweet media one
8
77
529
@muralijourno
Muralitharan K
2 years
வடக்கிலிருந்து எப்போதெல்லாம் தாக்குதல் வருகிறதோ, அப்போது தமிழ் என்ற அடையாளம் அரணாக நிறுத்தப்படுகிறது. தமிழர்கள் இந்துக்களா என்ற சமீபத்திய விவாதத்தில், இந்து என்ற மத அடையாளத்திற்கு எதிராக தமிழ் என்ற அடையாளம் மதச்சார்பற்றதாக முன்னிறுத்தப்படுகிறது. கட்டுரை:
Tweet media one
9
112
519
@muralijourno
Muralitharan K
3 years
இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற ஆளுமைகள் இருந்திருந்தால், இந்திய பெண்கள் குடியரசு இன்னும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? - பெரியார் குறித்து சுனில் கில்னானி. பெரியார், புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர் கட்டுரையின் தமிழாக்கம்.
Tweet media one
13
80
508
@muralijourno
Muralitharan K
3 years
2010-11ல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 20 சதவீதம். 2020-21ல் இது வெறும் 2 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது என்கிறது ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை.
Tweet media one
8
229
509
@muralijourno
Muralitharan K
2 years
விசாரணைக்குச் சென்றபோது, சிறுமியை ஒளித்துவைத்த தீட்சிதர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பாக பதிவான 22 குழந்தைத் திருமண வழக்குகளில் 4 வழக்குகள் தீட்சிதர்கள் தொடர்பானவை. விரிவான கட்டுரை: (2/2)
Tweet media one
7
99
500
@muralijourno
Muralitharan K
2 years
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற தொல்லியல் அதிகாரி சொ. சாந்தலிங்கத்தின் உரை எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பாக இருந்தது. பெரும்பாலான தகவல்கள் அவரிடமிருந்து ஏற்கனவே ஒரு கட்டுரைக்குப் பேசியபோது கிடைத்திருந்தன. (1/5)
Tweet media one
3
79
502
@muralijourno
Muralitharan K
2 years
ஜவஹர்லால் நேரு கட்டிய கோவில்கள் -------------- இன்றைய The Hinduவின் நடுப்பக்கத்தில் The Temples that Jawaharlal Nehru Built என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. London School of Economics சீனியர் ஃபெலோவாக இருக்கும் சி. சரத் சந்திரன் அதனை எழுதியிருக்கிறார். (1/15)
Tweet media one
14
195
503
@muralijourno
Muralitharan K
1 year
ரோமாஞ்சம்: ஒரு பேயின் வருகை ---- மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள திரைப்படமான Romancham ஒரு வழியாக OTTயில் வெளியாகிவிட்டது. 2007ஆம் ஆண்டில் பெங்களூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த 7 இளைஞர்களுக்கு நடந்த சம்பவத்தைத்தான், படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜீது மாதவன். (1/7)
Tweet media one
6
50
505