jeevasagapthan Profile Banner
jeevasagapthan Profile
jeevasagapthan

@jeevasagapthan1

35,330
Followers
210
Following
350
Media
922
Statuses

Founder of jeeva today Political Observer, Election Analyst, Writer Senior anchor,News18 tamilnadu

Chennai, India
Joined October 2016
Don't wanna be here? Send us removal request.
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
நியுஸ்18 லிருந்துந்துராஜினாமாசெய்துவிட்டேன் பொருளற்ற வாழ்வு கடினம்தான். அதற்காக பயனற்ற வாழ்வு வாழ முடியாது என்ற முடிவை துணிந்து எடுத்துவிட்டேன். உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தேவை.... நேர்மையான ஊடகப் பயணம்... மக்களுக்கான ஊடக குரல்.. அதுவே எனது இலக்கு
574
2K
10K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
நியூஸ்18 லிருந்து வெளியேறி மூன்று மாதங்கள் ஆகிறது. நானே ஒரு தனி ஊடகமாக மாறி விட்டேன் .இந்த மூன்று மாத காலத்தில் என்னுடைய ஊடகப் பணியை எப்படி பார்க்கிறீர்கள்?
890
313
6K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
விஜய் மீது கொண்ட அன்பினால் 100 விழுக்காடு இருக்கைகள் வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.. ரசிகர்கள் மீது 50 விழுக்காடு அன்பு இருந்திருந்தால் கூட 100 விழுக்காடு இருக்கைகள் வேண்டும் என்று விஜய் கேட்டிருக்க மாட்டார்.. நடிகர்களை நேசிக்கும் ரசிகர்கள். வணிகத்தைப் பெருக்கும் நடிகர்.
96
1K
5K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
6 லட்சம் கோடி பொது சொத்துக்கள் குத்தகைக்கு விடப்படுவது, எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் இருக்க ,நான் ஏன் திருட்டு கேமரா குறித்த நேர்காணலை நடத்த வேண்டும்? மக்களுக்கு பிடித்த செய்திகளை தருவதைவிட தேவையான செய்திகளை தருவதே நமது கடமை!
55
418
3K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
நான் முதலில் தமிழன் பிறகுதான், இந்தியன் - இந்தியா டுடே விவாதத்தில் திருமாவளவன் ஆவேச உரை
58
366
3K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
விரைவில் புதிய தளத்தில் சந்திக்கிறேன். கவனிக்கப்படாத செய்திகளையும், கவனத்திற்கு வரவேண்டிய மக்களையும் வெளிக்கொணருவோம். வாருங்கள் உரையாடுவோம் களமாடுவோம். கண்ணியமான செய்தி! கம்பீரமான வெற்றி! #மக்களுக்காகவேஊடகம் #மக்களேஊடகம்
65
321
3K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
7 தமிழர் விடுதலை விரைவில் சாத்தியமாகும் என்றே எனக்கு தோன்றுகிறது.
77
165
3K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
49 லிருந்து 54 வரை ராஜாஜியுடன் 54 லிருந்து 75 வரை காமராஜருடன் 64 லிருந்து 67 வரை பக்தவசலத்துடன் 72 லிருந்து 87 வரை எம்ஜிஆருடன் 89 லிருந்து 2016 வரை ஜெயலலிதாவுடன் #கலைஞர் கருணாநிதி
26
487
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பழ கருப்பையாவும், சரத்குமாரும் அருகில் இல்லாத நேரத்தில் இட ஒதுக்கீடு குறித்து யாரும் கமலிடம் கேட்டுவிடாதீர்கள்! #இடஒதுக்கீடுபரிதாபங்கள்
55
365
2K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
கட்டிலுக்கு அடியிலே ஒளிஞ்சிக்கிறேன்.... என்னை கண்டுபிடி என்று சொல்லும் குழந்தைகளிடம் ஒருமுறை கூட அப்பாக்கள் வென்றதில்லை....
27
202
2K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
பெரு நிறுவன பலம் இல்லை. என்னைத் தவிர வேறு ஊழியர்கள் இல்லை! தனி ஊடகமாக, தனியாளாக, நான் நடத்தும் ஜீவா டுடேவிற்கு நீங்கள் தரும் ஆதரவு எனக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது! தொடர்ந்து உரையாடுவோம்! களமாடுவோம்! #Jeevatoday
Tweet media one
124
173
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
உன் உதட்டு விரிப்பில் என் உலகமே அடங்கிவிடும்பொழுது, இந்த ஊரடங்கு என்னை என்ன செய்துவிடும் ?
Tweet media one
19
229
2K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
சிறு வயதிலிருந்தே இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடுவதை நான் பார்த்து வருகிறேன்.இந்தப் பொங்கலில் இஸ்லாமியர்கள் தாங்கள் கொண்டாடுவதை பகிரங்கமாக வெளிக் காட்டி மகிழ்கிறார்கள். தமிழர் அரசியல் வலுப்பெறுவதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். எதிரிகளுக்கு நன்றி!
24
348
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பர்பி என்பது தமிழாக மாறிவிட்ட சென்னை வாழ்க்கையில் , "அண்ணே கடலை மிட்டாய் இருக்கா ? என்று யாரேனும் கேட்டால், அவர் மண் மணம் மாறாத அக்மார்க் மதுரைக்காரர் என்று அறிக !.
180
153
2K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
தமிழ்நாடு அழுத்திக் சொல்வோம்!
Tweet media one
171
180
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
நீதிக்கட்சி அழிந்துவிடும் என்று சாபமிட்டார் பாரதியார். இன்று அவரின் வார்த்தைகளை கொண்டே நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவை வாழ்த்தியிருக்கிறார் குடியரசுத் தலைவர். பாரதியின் ஆருடம் பொய்யென்று பாரதியே ஒப்புக்கொண்டு விட்டார் போலும்! #KalaignarInAssembly
23
327
2K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
என் உழைப்பு! உங்கள் ஊடகம்! நமது வெற்றி! தொடர்ந்து உரையாடுவோம்! களமாடுவோம்! #jeevatoday
Tweet media one
106
86
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
குறவர் ,இருளர்,பிரான்மலைக் கள்ளர் உட்பட குற்றப்பரம்பரை சாதிகளாகஅடையாளப்படுத்தப்பட்ட 68 சமூகங்கள் குறித்து தொடர்ச்சியாக ஜீவா டுடே மூலம் , கடந்த ஓராண்டாகவெளிப்படுத்தி வருகிறேன். தற்போது அவர்களை பற்றி பரவலாக பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. #JEEVATODAY
33
192
2K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
மருத்துவ கல்லூரியில் சேர்ந்தால் எந்த பள்ளிக்கூடம் என்று கேட்ட காலம் மறைந்து, எந்த கோச்சிங் சென்டர்? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது.
37
361
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
1938 லேயே தனித்தமிழ்நாடு கேட்டவர் பெரியார். தனிநாடு கேட்டதில் ஜின்னாவிற்கும் அண்ணாவிற்கும் முன்னோடி பெரியார்.
29
262
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பச்சை தமிழன் ஏ.ஆர் ரகுமான் வாழ்க!
15
154
2K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
தொடங்கிய நூறாவது நாளில் நூறாயிரம் உறவுகள்..... சரியான ஊடகவியலாளனாய் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை தமிழ் சமூகம் உறுதி செய்துவிட்டது. தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்....
Tweet media one
63
83
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
தமிழர் என்ற பெருமிதமே அடிப்படைவாத உணர்விலி ருந்து நம்மை பாதுகாக்கும்....
Tweet media one
51
97
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
குடும்பம், பள்ளி வளாகம், மத பீடங்கள் இவைகளெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதத் தலங்கள் என்ற கற்பிதத்தை உடைத்தெறிய வேண்டும். கேள்விக்கு அப்பாற்பட்ட இடங்களே குற்றங்களின் தோற்றுவாயாக மாறுகின்றன. #PSBB #பாலியல்குற்றங்கள்
26
401
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
தொடர்ந்து ஆதரவு தரும் நம் தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பும் நன்றியும்....
Tweet media one
38
91
2K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
காங்கிரஸ்காரர்களான நரசிம்மராவையும், சர்தார் வல்லபாய் பட���லையும் பாரதிய ஜனதா கொண்டாடுகிறது. ஆனால் தீவிரமான காங்கிரஸ் எதிர்ப்பு பேசிய விபிசிங்கை கொண்டாடுவதில்லை. இதுதான் மற்ற காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கும் விபி சிங்கிற்குமுள்ள நுட்பமான வேறுபாடு. # விபிசிங்
19
299
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
தேசம் தாண்டி வணிகம் தேவைப்பட்டால் கேபிடசலிசம் தேசம் தாண்டி மனிதம் தேவைப்பட்டால் கம்யுனிசம் மே தினச் சிந்தனை
18
191
2K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
நடிகர் அர்ஜீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் சிறு வேண்டுகோள் நிறைய தமிழ் படங்களில் நடித்து,தமிழர்களுக்கு இந்தியன் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அதே போல்,கர்நாடக படங்களில் நடித்து கன்னடர்களுக்கும் இந்தியன் என்ற உணர்வை ஊட்ட வேண்டும்.
18
141
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
தாதாசாகிப் மேடையில்பாலச்சந்தர் பெயரை சொன்ன ரஜினிகாந்த் ,தனக்கு திருப்பத்தை தந்த பாரதிராஜா, அடையாளத்தை தந்த மகேந்திரன் ஆகியோரின் பெயர்களையும் சொல்லியிருக்கலாம். மனதிலிருந்து பேசும்போது மகேந்திரனைக் குறிப்பிடும் ரஜினி, விருது மேடையில், ஏனோ பாலச்சந்தரை மட்டுமே குறிப்பிடுகிறார்.
297
170
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
3வது பெரிய கட்சி என்பது வேறு,3வது இடத்திற்கு வந்த கட்சி என்பது வேறு !
61
123
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
மீன் கூடை நாறுதுன்னு சொல்றீய ! நீ எல்லாம் கன்னியாகுமரிகாரனா? இது மீன் விக்கும் மூதாட்டிக்கு ஏற்பட்ட அவமானமல்ல. குமரி மைந்தர்களுக்கே ஏற்பட்ட அவமானம். # மீன் வாசம் அறியாதவர் மக்கள் அல்ல! மாக்கள் !
17
161
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பெரியாரிய அமைப்புகளும், இசுலாமிய அமைப்புகளும் நெஞ்சுருகி கண்ணீர் சிந்துவதிலிருந்து தெரிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால்,தமிழகத்தின் அடையாளம் மாந்தநேயம் மட்டுமே!மதவாதம் ஒருபோதும் எடுபடாது! #மதுரைஆதினம்
16
187
1K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
ஆழி சூழ் உலகு! தமிழ்நாடே எங்கள் வீடு!
Tweet media one
33
90
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
"அண்ணாமலை"யில் இருந்து தலைவருக்காக போஸ்டர் ஒட்டும் ராயபுரம் ரவியும் "பாபா" பட விவகாரத்தில் பாமகவிடம் அடிவாங்கிய ரஜினி ரவியும்,இனி அர்ஜீன மூர்த்தியின் சொல்வதைத் தான் கேட்கவேண்டும். #ரஜினிகாந்த் #RajiniPolitics #rajinikanthpolticalentry #ரஜினி
25
177
1K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
திராவிடர் கழகத்தை விமர்சிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு ஊடகம் விரும்பினால் ,நேரடியாக அமெரிக்கை நாராயணனிடம் சென்று ,பாஜக மதவாத கட்சியா? என்று கேளுங்கள். அவர், உடனே திராவிடர் கழகத்தை சரமாரியாக விமர்சிக்க தொடங்கிவிடுவார்.
32
181
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
போராடி 27 விழுக்காடு கிடைத்தது . போராடாமலே 10 விழுக்காடு கிடைத்துவிட்டது..... #27 %OBC #EWSreservation
26
164
1K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
இது உங்களின் வெற்றி! நமக்கான வெற்றி! யூ டியூப் தரும் சில்வர் பட்டனை விட தமிழர்களை அரசியல் படுத்தும் பணியி���் கிடைக்கும் மகிழ்ச்சியே, எனக்கு கிடைக்கும் உண்மையான வெற்றி!
Tweet media one
72
60
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
இது நமது ஊடகம்.Liberty tamil ஊடகத்தை subscribe செய்து நண்பர்களுக்கும் பகிருங்கள்...
Tweet media one
31
184
1K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
இட ஒதுக்கீட்டை அழிப்பதற்கு சட்டரீதியான வேலையை செய்ய தொடங்கி விட்டார்கள். இதற்குப் பிறகும் விழிப்படையவில்லை என்றால் படுகுழியில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது! #EWS
73
277
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
"எத்தனை பெரியார் வந்தாலும்" என்ற வசனத்தை தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி முழுவதும் பேச வைத்தவர். தனது நகைச்சுவையின் மூலமாக மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை செய்தவர். படித்த இளைஞன் என்ற அடிப்படையில் தனது விமர்சனங்களை திரைப்படங்களில் முன்வைத்தவர்.நடிகர் விவேக்கிற்கு ஆழ்ந்த இரங்கல்
8
164
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பார்வதி இருளர் கிடையாது.குறவர் என்று தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டேன்.தற்போது சூர்யா பார்வதிக்கு நிதி உதவி அளித்திருக்கிறார். பார்வதிக்காக குரல் கொடுத்து, அவர் பயனும் அடைந்திருக்கிறார் என்கிறபோது ஊடகவியலாளனாக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். #JEEVATODAY
20
102
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
உபி பாலியல் வன்புணர்ச்சி குறித்து மார்கண்டேய கட்ஜு கூறியதையும் பாபர் மசூதி இடிப்பு குறித்து கமலஹாசன் கூறியதையும் சரியாக புரிந்து கொண்டால் அவர்கள் யாருக்கு சாதகமாக பேசி இருக்கிறார் என்பது தெரியும்.
13
232
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
குறவர்கள் என்றாலே, நரிக்குறவர்களின் உடை, மொழி,கலாச்சாரம்தான் நமக்கு நினைவில் வருகிறது. குறிஞ்சி நிலக்குடிகளான மலைக்குறவர்கள் எங்கே? கல்வி வேலைவாய்ப்பில் அவர்களின் நிலை என்ன ?என்பது போன்ற கேள்விகளை இனிமேலாவது எழுப்ப வேண்டும்.
13
219
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
நடிகர் அர்ஜுன் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு என்று ஒரு செய்தியைப் படித்தேன்.எனக்கு ஒரு சந்தேகம்? நடிகர் அர்ஜுன் பாஜகவில் தானே இருக்கிறார். அவர் அந்த கட்சி தலைவர்களை சந்திப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?
17
110
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
உடலுறுப்புகள் ஒத்துழைக்க மறுத்து சில ஆண்டுகளாகிறது. அவரது சிந்தை இந்தக் கணத்திலும் பொதுவுடமை, தமிழர் உரிமை, பெரியார், அம்பேத்கர், மாநில சுயாட்சி போன்ற சொற்களைக் கேட்டால் ,புத்துணர்வு பெற்று விடும். 3 வாரங்களுக்கு முன்பு நான் எடுத்த நேர்காணல் இதற்கு சாட்சி.நலம் பெற்று வாருங்கள்
Tweet media one
12
128
1K
@jeevasagapthan1
jeevasagapthan
1 year
தலைமுறை கடந்தும் நிற்கும் ஆயுதம் மட்டுமல்ல...! தலைமுறை தலைமுறையாக கடத்த வேண்டிய ஆயுதமும் கூட!
Tweet media one
59
153
1K
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
"தேங்காய் சில்லு" வாங்கிட்டு வா என்று சொல்லும் பழக்கம் மதுரை பக்கம் உண்டு. சென்னையில் த���ங்காய் சில்லு என்றால் யாருக்கும் தெரியாது. தேங்காய் சில்லு தாங்க! என்று கடையில் கேட்ட நினைவு இருக்கிறதா?
210
52
1K
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
தமிழ் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடவும், களமாடவும் நீங்கள் எனக்கு தரும் ஆதரவு எனக்கு ஊக்கமளிக்கிறது. நன்றி மக்களே!
Tweet media one
37
55
1K
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
ஊடகத்துறையில் பல தம்பிகளுக்கு முன் மாதிரியாக விளங்கும் அண்ணன் @karthickselvaa அவர்களுக்கு பிறந்தநாள் வணக்கங்கள்....
Tweet media one
26
31
981
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
உழைப்பு என்னுடையது! அன்பு உங்களுடையது! வெற்றி நமக்கானது!
Tweet media one
56
43
923
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
காதல் கூடாது என்கிற ஆணவம் அழியட்டும் காதல் புனிதம் என்கிற கற்பிதம் ஓழியட்டும் #காதலர் தினம்
18
95
921
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
7 தமிழர் விடுதலையில் ராகுல் காந்தியை விட,தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குத்தான் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது போல!
42
95
901
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
தனக்கு கொரொனா வராது என்று அறிவியலுக்குப் புறம்பாக நம்பிக் கொண்டிருந்த டிரம்ப் ,ஒரு வழியாக முககவசம் அணிந்துவிட்டார்.அமெரிக்காவில் கொரோனா பெருகியதற்கு இவரின் அலட்சியமும், அறியாமையும் முக்கிய காரணம். வல்லரசு அதிபராகவே இருந்தாலும் பகுத்தறிவு இல்லையென்றால் பிரச்சனைதான். #ட்ரம்ப்மாஸ்க்
9
128
853
@jeevasagapthan1
jeevasagapthan
3 months
தமிழிசைகளுக்கு பாஜகவில் உச்சபட்ச பதவி கிடைக்கும் ! குறைந்த பட்ச மரியாதை கிடைக்குமா ? அவர��ன் சுயமரியாதைக்காக தமிழ்நாடு துடிக்கிறது! இதுதான் பெரியார் மண் ‌!
123
126
868
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
காதல் புனிதம் அல்ல என்பதை காதலுடன் சொன்ன இயக்குநர் ஜனநாதன் இனி நம் நினைவுகளில் மட்டும்!
1
66
830
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு யாதவர் கல்லூரியில் சிறப்புரை ஆற்றுகிறேன். நான் படித்த கல்லூரி , பெரியார் பிறந்த நாளில் கருத்தாளானாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதை பெருமகிழ்வாக உணர்கிறேன்!
Tweet media one
47
68
800
@jeevasagapthan1
jeevasagapthan
1 year
உங்களின் பேரன்பும் பேராதரவுடன்...
Tweet media one
82
43
771
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
இன்னும் பிறக்காத தலைமுறைக்கும் சேர்த்து தான் நமது முன்னோர்கள் இந்த பூமியை நமக்கு விட்டுச் சென்றார்கள்.....
4
74
742
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
தலையணையில் தலை வைத்து தூங்கும் குழந்தைகளை ஒரு நொடியில் எழுப்பிவிடலாம்…. அப்பாவின் கையைத் தலையணையாக்கித் தூங்கும் குழந்தைகளை எழுப்புவது அவ்வளவு எளிதல்ல…..
9
52
744
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
உடைந்த மருந்து பாட்டில்,பழைய நியுஸ் பேப்பர்,மூடியில்லாத வாட்டர் பாட்டில் என எல்லாவற்றையும் தயக்கமில்லாமல் கோனிப்பைக்குள் திணித்த பிறகு, 3 ம் வகுப்பு பாடநூலை மட்டும் நெஞ்சோடு அணைத்து கொண்டான் படிப்பை பாதியில் விட்ட குப்பை பொறுக்கும் சிறுவன்......
8
79
747
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
டார்வின் கோட்பாட்டை சரியாக சொன்ன மாணவனை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று சொல்லி வாழ்த்தினார் அந்த விலங்கியல் பேராசிரியர்....
12
77
737
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டில் அறியப்படுவதற்கு முன்பே மதமாற்ற எதிர்ப்பு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு என அதன் கொள்கைகளுக்கு திரைப்படங்களில் உயிர் கொடுத்தவர் பாலச்சந்தர். ஏனோ,பாஜக அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை? #பாலச்சந்தர் பிறந்தநாள்
18
72
719
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
கொரோனா தீவிரம் அடைவதை உணர முடியாத வகையில் அரசியல் பரபரப்புகள் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் பரபரப்பில் மக்கள் மூழ்கி விடாத வண்ணம் பிக்பாஸ் பார்த்துக் கொள்கிறது.
9
130
717
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
சென்னை முழுவதும் மாரியம்மன் விழாக்களை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். விழாவை முடித்த கையோடு அதே நபர்கள் "மேரி"யம்மன் விழாவையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்...
25
66
706
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
உழவுப் பணி அரிதாகிக் கொண்டிருக்கிறது.... உளவுப் பணி எளிதாகிக் கொண்டிருக்கிறது.... #PegasusProject
10
78
706
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
சிவனைப் புகழ்ந்து பாட பாட நாத்திகர் காதில் தேன் வந்து பாயும் அதிசயம் நடக்கிறது.... #பெண்ஓதுவார் #தமிழில்அர்ச்சனை
17
59
688
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
தமிழர் வாழ்வெங்கும் மகிழ்ச்சி பொங்கலோ பொங்கல் என பொங்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Tweet media one
36
37
691
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பாஜகவின் கொள்கைகளை ஆதரித்து விட்டு,பிறகு ஆன்மீக அரசியலே தமிழகத்திற்கு தீர்வு என்று முழங்கிய இயக்குனர் பிரவீன் காந்தி இப்போது தன் கருத்துக்களுக்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்திருக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம்.மய்யம் என்பது முழுமையான வலது என்பது நிருபிக்கப்பட்ட தேற்றம்.
24
150
676
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
அனிதாவை நீட் பாடத்திட்டம் கொன்றது. அடுத்தடுத்து நம் தமிழ் பிள்ளைகளை நீட் தேர்வின் வடிவம் கொன்றுக் கொண்டிருக்கிறது .இந்த பிரச்சனை நீண்டுகொண்டே இருக்கிறது. இது தொடர்பா எதுவும் பேசக்கூட மனசுல தெம்பு இல்ல ரொம்ப வலியா இருக்கு.... #IamSorryIamTired
4
152
661
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
கரியமில வாயு ஆக்சிஜன் தயாரிக்கப் போகிறதா? அடடே!
15
87
642
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
"பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்வோம் எங்கள் பாரத தேசம் என்று மார்தட்டுவோம்"- என்று பாடினார் பாரதி. "இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம் "என்றார் புலமைப் பித்தன்.
6
99
640
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
வன்னியர்களுக்கான 10.5 % ரத்து என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது .தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் . ஒன்றிய அரசு எதிர்த்தால், முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்.சமூகநீதி இயக்கங்களும் இதற்கு துணைநிற்கவேண்டும்.
16
103
628
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
கண்ணியமான நேர்காணல்கள்....அரசியலை வரலாற்றுப் பார்வையுடன் பகுத்து தரும் அரசியல் திறனாய்வு என லிபர்டி தமிழ் கம்பீரமாக நடை போட்டு வருகிறது .உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி... #libertytamil
Tweet media one
17
31
620
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமையை பெற்றுத்தர வாழ்நாள் முழுவதும் போராடிய அய்யா ஆனைமுத்து தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.அய்யாவிற்கு வீரவணக்கம்.
8
102
617
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
பெண்ணே உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழமாட்டேன். புரட்சிக்காக நாத்திகம் பேசியவர்களை விட காதலுக்காக நாத்திகம் பேசிய கவிஞர்களே அதிகம்..
12
54
619
@jeevasagapthan1
jeevasagapthan
9 months
தொடர்ந்து உரையாடுவோம்....களமாடுவோம்.... பேரன்பும் நன்றியும்....
Tweet media one
65
46
610
@jeevasagapthan1
jeevasagapthan
1 year
விஜயகாந்த், ரஜினிகாந்திற்குப் பிறகு,அந்தப் பெரியவர் விஜய்யை ஆதரிப்பார் என்று நினைத்தேன்! அவர் அண்ணாமலையை ஆதரித்து விட்டார்! #தமிழருவிமணியன்
40
78
607
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
JeevaToday தமிழருவி மணியன் இதுவரை தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார் என்பதை விவரிக்கும் காணொளி....பார்த்துவிட்டு கருத்து பகிருங்கள்.... via @YouTube
53
120
588
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
தனி ஒருவனாக என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? முடியும் என்று உரக்கச் சொல்கிறது நமது ஜீவா டுடே . நான் தனி ஒருவன் அல்ல! 12 கோடி தமிழர்களின் ஒருவன் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
Tweet media one
50
30
576
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
மனிதம் தாண்டி வணிகம் மட்டும் உலகமயமாதல் ஆபத்து.... வணிகம் தாண்டி மனிதம் உலகமயமாதல் காலத்தின் தேவை....
9
73
581
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
தென்காசி.....
Tweet media one
10
12
557
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
விளிம்பு நிலை மக்களுக்கான குரல்! தமிழின உரிமைக்கான குரல் !இது உங்களின் குரல் !உங்களின் ஊடகம்! உங்களின் வெற்றி!
Tweet media one
33
25
547
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
உண்மையை உரக்க பேசுவதற்கு நீங்கள் தந்து கொண்டிருக்கும் அங்கீகாரம் !தொடர்ந்து உரையாடுவோம்! களமாடுவோம்! #jeevatoday
Tweet media one
47
28
544
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
ஆண்மை பெண்மை தாய்மை என்ற மை விகுதி புனிதங்கள் ஒழியட்டும். பிறப்பின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்ற அறிவுடைமை மலரட்டும். #அன்னையர் தினம்
6
60
551
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
ஏகலைவனின் கட்டைவிரல் ,சம்புகன் தலை இதையெல்லாம் காணிக்கையாக கேட்டவர்கள் தமிழ் தாயை எப்படி மதிப்பார்கள்? தமிழன் படிப்பதையே ஆபத்து என்று பதறியவர்கள்,தமிழனின் மொழிக்கு எப்படி மரியாதை தருவார்கள்? #தமிழ்த்தாய்வாழ்த்து
10
118
536
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
மக்களுக்கான ஊடகம்! மகத்தான ஆயுதம்! தொடர்ந்து உரையாடுவோம்! களமாடுவோம்!
Tweet media one
34
16
541
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
முற்றத்தை மட்டும் இடிக்கவில்லை. முற்றாக அழிக்க துடிக்கிறார்கள். தமிழினத்தை அளித்தால், நீதி கேட்க அமெரிக்காவும் வராது, கியூபாவும் வராது. நாதியற்ற தமிழினம். #முள்ளிவாய்க்கால்_நினைவுத்_தூண் #மாகாணகவுன்சில்கலைப்பு
15
92
537
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்ட அனைத்து ஜன்னல்களையும் அடைத்துவிட்டு ஏசி போடுவதுதான் காற்றின் மீது மனிதன் செலுத்தும் ஆகப் பெரிய வன்முறை....
12
38
525
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
நான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்ததற்கு பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். அனைவரது பெயரையும் சொல்ல முடியாது என்பதால்,ஒரே ஒருவருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ரஜினிகாந்த்.... 2 ஆண்டுகளுக்கு முன்பு நியுஸ் 18 மகுடம் விழாவில் இயக்குனர் மகேந்திரன்
35
53
508
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
தஞ்சை பக்கத்தில் சாதி வெறியால் பாதிக்கப்பட்ட தோழர் ஒருவரின் பிரச்சினையை ஜீவா டுடே வில் பேசினேன். தற்போது நீதி கிடைத்திருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.ஜீவா டுடே மக்களுடன் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது . மகிழ்ச்சி ❤️ #jeevatoday
13
60
502
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
கலைஞரை சக்கர நாற்காலி என்று கமல் விமர்சித்ததன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்களை அலசியுள்ளேன். பார்த்துவிட்டு கருத்துகளை பகிரவும்.
51
111
498
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
Tweet media one
11
11
498
@jeevasagapthan1
jeevasagapthan
4 months
தமிழ் சமூகத்திற்கு தலைமையேற்கும் பண்புகளுடன் சின்னத்துரை உருவாகிறான்....எதிரிகளை இதற்கு மேல் தண்டிக்க முடியாது....!
Tweet media one
5
41
501
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
அரசாணை பிறப்பித்தால்,ஆளுநர் ஒப்புதல் தருவார் என்றால்,ஆளுநரை விட மாநில அரசே வலிமையானது. சட்டமன்ற இறையாண்மையே அதிகாரமிக்கது. இதை நமது மாநில அரசும் உணர வேண்டும் .மாநில உரிமைக்காக போராடும் அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் புரிந்து கொள்ள வேண்டும். #ஆளுநர்
4
72
480
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
கொளத்தூர் மணி நேர்காணல் வந்துவிட்டது. ராஜீவ் காந்தி நேர்காணல் எங்கே ? என்று பலர் கேட்கிறார்கள் .நண்பர்களே! நமது லிபர்டி தமிழ் சேனலுக்கு போய் பாருங்கள். அண்ணன் ராஜீவ் காந்தியும் களம் இறங்கிவிட்டார். இரண்டு நேர்காணல்களில் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!
14
49
474
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
ஜெயலலிதாவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட 18 பேருக்கு எடப்பாடியார் வாய்ப்பு வழங்கியுள்ளார். தினகரனிடமிருந்து பிரிந்து எடப்பாடியை ஆதரித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடக்கத்தில் ஓபிஎஸை ஆதரித்துவிட்டு, பிறகு இபிஎஸை ஆதரித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
10
67
471
@jeevasagapthan1
jeevasagapthan
2 years
தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை இல்லாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீவா டுடே வில், நேற்று சுட்டிக் காட்டிய அபாயம் இன்று தினத்தந்தியில் செய்தியாக வந்திருக்கிறது. வீடியோவை சக தமிழர்களுக்கு தயவுசெய்து பரப்புங்கள்
17
215
467
@jeevasagapthan1
jeevasagapthan
4 years
பணம் கொடுப்பவர்களால் அல்ல.அடம்பிடிக்கும் குழந்தைகளால்தான், பலூன் வியாபரிகளுக்கு வாழ்க்கை ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது.
2
22
462
@jeevasagapthan1
jeevasagapthan
3 years
அணை பாதுகாப்பு மசோதா மாநில உணர்வை காவு வாங்கும் சட்டம். இதில் மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்த்து போராட வேண்டும்.
5
75
459