Lakshmivva Profile Banner
Lakshmivva Profile
Lakshmivva

@Lakshmivva1

24,902
Followers
948
Following
2,690
Media
296,264
Statuses

வெற்றியைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது தோற்றவனின் திடம்

சென்னை
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Lakshmivva1
Lakshmivva
8 months
#நிழல்_மயக்கம் கவிதைத் தொகுப்பு வெளியாகிவிட்டது. 2023இன் இன்னொரு மகிழ்வான தருணம். அன்பும் மகிழ்வும் மக்களே. 😍😍🙏🙏 2024 சென்னை புத்தகக் காட்சியில் சந்தியா பதிப்பக அரங்கில் கிடைக்கும். 🙌
Tweet media one
45
88
101
@Lakshmivva1
Lakshmivva
10 months
நாடகத்தனம், புரட்சித்தனம் தாண்டி இயல்பான வசனங்கள், அழகியல். 🤍#ரஜினி & #ஷோபா 😍😍
17
205
811
@Lakshmivva1
Lakshmivva
3 years
வணக்கம் நட்புகளே😊🙏 முதல் கவிதைத்தொகுப்பு #உடன்பாட்டு_வெயில்
Tweet media one
178
196
420
@Lakshmivva1
Lakshmivva
3 years
குமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் ரூ.10000/- பரிசு பெற்ற கதை இந்த வார இதழில். உங்களோடு பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி 🙏 🙏
Tweet media one
151
126
406
@Lakshmivva1
Lakshmivva
4 years
என்னுடைய கதை குமுதத்தில் தேர்வாகியுள்ளது. உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
Tweet media one
148
89
405
@Lakshmivva1
Lakshmivva
5 years
எனது மூன்று கவிதைகள் இம்மாத 'ஜீவநதி' சஞ்சிகையில்..அன்பு சகோதரர் @esumuralee க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. படித்துத் தங்களது கருத்துக்களைக் கூறுங்கள்.. 🙏 🙏 🙏
Tweet media one
Tweet media two
110
233
356
@Lakshmivva1
Lakshmivva
11 months
நாகேஷ் இந்தப் படத்துல பண்ணிருக்கிற அட்டகாசம் இருக்கே 😂😂😂😍
13
90
308
@Lakshmivva1
Lakshmivva
6 years
பார்ப்பன வீட்டுப் பிதுர்க்களுக்காச் சைவக் காகங்கள் பிறப்பதுண்டோ?
Tweet media one
33
171
264
@Lakshmivva1
Lakshmivva
3 years
தொண்டையைத் தாண்டி வெளிவராத துயரம் சற்றே இறங்கி இதயத்தை அழுத்துகிறது
24
124
263
@Lakshmivva1
Lakshmivva
2 years
இன்றைய வெளியீடு. இரண்டாவது நூல். மிகுந்த மகிழ்ச்சியான நாள். 😊 🙏
Tweet media one
137
129
252
@Lakshmivva1
Lakshmivva
6 years
எந்தச் சோதிடமும் பார்க்காமலே நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகள் நலமாக இருக்கிறது சூரியக் குடும்பம்; அந்தக் குடும்பத்தையே சந்திக்கு இழுத்துச் சோதிடம் பார்க்கிறோம் நாம்.
Tweet media one
25
191
251
@Lakshmivva1
Lakshmivva
6 years
இரவுப்பையன் பெண் பார்க்க வருவதாகத் தகவல் வந்ததாம், அகச் சிவப்பில் அந்திப் பெண்.
Tweet media one
27
134
242
@Lakshmivva1
Lakshmivva
8 months
இராமாயணம் ரீமேக் கதை. 😂😂 #நாகேஷ் 😍😍😂
6
66
232
@Lakshmivva1
Lakshmivva
2 years
என்���ுடைய பார்வையில் கலித்தொகையில் அறிந்து கொண்டவை. உங்கள் கைகளுக்கு நூலாக. 🙏 💐
Tweet media one
56
177
229
@Lakshmivva1
Lakshmivva
6 years
மரங்களை சாய்த்து விட்டீர்! ஆலைகள் என்ற பெயரில், அமிலத்தை ஊற்றுகிறீர்! வேரெல்லாம் தீப்பிடிக்க விவசாயம் இன்றியே என் மக்களையும், என்னையும் அழிக்கவே புறப்பட்டீர்! நீரும் அழிவீரென அறியா மூடரே! என்றே நிலமகள், நீடு பெருங் கவலையில் நொந்து கிடக்கின்றாள்! #BANSterliteSAVETHOOTHUKUDI
Tweet media one
24
206
219
@Lakshmivva1
Lakshmivva
2 years
பிழைக்கத் தெரிந்தவர்கள் பூப்பறிக்கிறார்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் நீரூற்றுகிறார்கள் இருவருக்குமாகச் சுற்றுகிறது பூமி
30
95
218
@Lakshmivva1
Lakshmivva
5 years
எப்படி இருக்கு?😂😂 #mysketch
Tweet media one
77
84
202
@Lakshmivva1
Lakshmivva
4 years
#mysketch 😊🙏🙌
Tweet media one
62
69
200
@Lakshmivva1
Lakshmivva
5 years
#mysketch கொஞ்சம் சிரிச்சிருக்கலாமோ?
Tweet media one
80
70
197
@Lakshmivva1
Lakshmivva
6 years
ஒரு கண்ணில் புரோட்டானும் மறு கண்ணில் எலக்ட்ரானும் கொண்டு, நோக்கும் போதெல்லாம் எனை நியூட்ரானாக்குகிறாய்.
Tweet media one
18
137
196
@Lakshmivva1
Lakshmivva
6 years
எதற்கும் இன்னொருமுறை சிந்தித்துக்கொள்; தொடரப் போகும் பிரிவைவிட என்னையே சகித்துக்கொண்டு இருந்திருக்கலாமோ என்று தோன்றக்கூடும் உனக்கு.
Tweet media one
19
176
202
@Lakshmivva1
Lakshmivva
5 years
பெய்தலுக்கும் கொய்தலுக்கும் இடையே பொய்த்தலில்லாப் பெருவாழ்வு.. பூக்களுக்கு.
Tweet media one
21
110
194
@Lakshmivva1
Lakshmivva
7 months
இந்தப் படம் 😍 லிரிக்ஸ் 😂😂😂
12
71
205
@Lakshmivva1
Lakshmivva
6 years
முட்களை விடவும் பூக்களால் உண்டாகும் காயங்கள் ஆறுவதில்லை அவ்வளவு எளிதில்.
Tweet media one
21
173
186
@Lakshmivva1
Lakshmivva
5 years
மூக்கை உறிஞ்சி மறுக்கிறது ஐஸ் வேண்டாமென்று குழந்தை.. காசு கரைந்த அப்பாவின் சட்டைப்பையைப் பார்த்தபடி.
Tweet media one
23
103
177
@Lakshmivva1
Lakshmivva
6 years
காரணம் கேட்கிறாய் நீ என்பதே போதாதா உன்னைப் பிடித்திருக்க.
Tweet media one
23
124
178
@Lakshmivva1
Lakshmivva
3 years
தலையசைக்க மரமே இல்லாத இடத்தில் மணலைத் தோளில் அள்ளிக்கொள்கிறது காற்று
Tweet media one
23
102
171
@Lakshmivva1
Lakshmivva
6 years
உருகிக் கரைவதும் இறுகி உடைவதும் நேர்ந்திருக்காது.. நீர் நீராகவே இருந்திருந்தால்.
Tweet media one
10
130
172
@Lakshmivva1
Lakshmivva
6 years
வேர்களைச் சிறையென்று மரங்கள் சொல்வதேயில்லை அன்பு சுமப்போர் போல்
Tweet media one
21
147
173
@Lakshmivva1
Lakshmivva
5 years
ஆண் மானும், பெண் மானும், தன் இணை அருந்தட்டுமென விட்டுவைத்த நீர் வற்றாதிருந்ததென அன்று அகத்திணை உரைத்தாற்போல், அவள் வைக்கட்டும் எனத் தலைவனும், அவன் வைக்கட்டும் எனத் தலைவியும் எண்ணி, நில்லாமல் நீள்கிறது அலைபேசி உரையாடல்.
Tweet media one
20
113
170
@Lakshmivva1
Lakshmivva
6 years
வலிகள் பழகிவிட்ட பிறகு, கிடைக்கப்பெறும் அன்பும் வலியென்றே கொள்ளப்படும்.
Tweet media one
16
129
169
@Lakshmivva1
Lakshmivva
6 years
என்னை நீயாக ஆக்கினாய், சரி ; என்னை எனக்கே யாரோவாக மாற்றியது ஏன்?.
Tweet media one
16
151
165
@Lakshmivva1
Lakshmivva
3 years
#mysketch 😊🙏
Tweet media one
39
54
168
@Lakshmivva1
Lakshmivva
6 years
உன்னிடம் பேச மொழியில்லாப் பொழுதில் சொற்களைக் கொலை செய்து புதைத்த பின், மௌனம் விதைத்தேன்... விளைகிறது கண்ணீர்.
Tweet media one
23
136
168
@Lakshmivva1
Lakshmivva
6 years
சாலையில் இறங்காதவரை சாளரத்தின் அளவே வானமும்
Tweet media one
13
128
158
@Lakshmivva1
Lakshmivva
5 years
வெற்றியைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது தோற்றவனின் திடம்
Tweet media one
18
117
159
@Lakshmivva1
Lakshmivva
6 years
என்னோடு பேசிச் சிரிக்கும் வாய்ப்பையெல்லாம் வீணாக்கிவிட்டு, என் பிணத்தோடு அழும் இவர்களை மன்னிக்க ஏதேனும் வழியுண்டா?.
Tweet media one
11
130
158
@Lakshmivva1
Lakshmivva
3 years
வெளியேறும் வழியறிந்துவிட்டால் இருப்பது வெகு சுலபம்
Tweet media one
15
65
160
@Lakshmivva1
Lakshmivva
6 years
நான் என்பது, உன் நினைவுகளின் தொகுப்பு. நீ என்பது, என் வாழ்வின் தலைப்பு
Tweet media one
21
122
145
@Lakshmivva1
Lakshmivva
5 years
குழந்தைகளோடு காகமும், நரியும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.. வடை சுடவோ, கதை சொல்லவோ பாட்டிதான் வீட்டில் இல்லை.
Tweet media one
19
120
148
@Lakshmivva1
Lakshmivva
6 years
உன் நினைவுப் பசிக்குக் கனவை உணவாக்கினேன்; என் கவிதைப் பசிக்கு அந்நினைவே உணவானது.
Tweet media one
20
125
147
@Lakshmivva1
Lakshmivva
6 years
எல்லாவற்றையும் கற்பனை செய்ய முடிகிறது எதிர் நிற்கும் உண்மையைத் தவிர.
Tweet media one
13
144
153
@Lakshmivva1
Lakshmivva
5 years
அறிந்தோராயினும் உணர்ந்தோரில்லை உணர்ந்தோரெல்லாம் கடந்தோரில்லை அறிந்தும் உணர்ந்தும் கடந்தோரெல்லாம் மறந்தும் கொள்கை தறித்தோரில்லை
Tweet media one
18
126
149
@Lakshmivva1
Lakshmivva
4 years
உதிர்ந்த இலைக்கும் ஓர் அவதாரம் கிடைக்கிறது சிற்றுயிர் கடப்பதற்கு படகாக
Tweet media one
15
88
148
@Lakshmivva1
Lakshmivva
5 years
கருத்தை மேயும் ஆடுகளுக்கு கைக்கெட்டியவாறு வாசிப்புத் தோன்று புலங்கள்
Tweet media one
13
102
148
@Lakshmivva1
Lakshmivva
5 years
விளிம்புத் தையலில் மரத்தோடு மட்டையை ஒட்டவைத்துச் சுற்றிக்கிடக்கும் தெங்கின் பன்னாடை விலகலில் மட்டை வீழ்கிறது, சிந்தைக்குறுக்கத்தில் சல்லடையில் வழிந்த அன்பாக.
Tweet media one
9
87
148
@Lakshmivva1
Lakshmivva
5 years
கரிசலுக்கு வெகு தூரம் கடல்.. குடியானவன் சட்டையில் உப்புக்காய்ச்சி இருந்தது வெயில்.
Tweet media one
13
97
138
@Lakshmivva1
Lakshmivva
6 years
பிரிவைச் சுமக்கலாம்.. பிரிந்தது சரியென இன்னொரு முறையும் உணராதிருக்கும்வரை.
Tweet media one
4
122
143
@Lakshmivva1
Lakshmivva
5 years
Tweet media one
68
59
132
@Lakshmivva1
Lakshmivva
5 years
ஒளியை முதலில் உன் வீட்டில் ஏற்று! அதன் வெளிச்சம் அடுத்த வீட்டின் இருளுக்கும் அச்சம் கொடுக்கும்.
18
96
141
@Lakshmivva1
Lakshmivva
5 years
பதில்களை எழுதுவதல்ல கேள்விகளை உண்டாக்குவதே.. கல்வி
Tweet media one
14
108
141
@Lakshmivva1
Lakshmivva
6 years
நான் இதற்காகத்தான் பிறந்தேன் என்று அறுதியிட்டுக் கூற முடியாதுதான்; ஆனாலும், இதற்காகவெல்லாம் ஒன்றும் நான் பிறந்துவிடவில்லை என வகைப்படுத்திவிட முடியும்தானே?.
Tweet media one
15
114
142
@Lakshmivva1
Lakshmivva
6 years
கடலுக்கும், கரைக்குமான காதலை, கௌரவக்கொலை செய்கிறார்கள் நெகிழியெனும் ஆயுதங்கொண்டு. யாருக்குத் தண்டனையோ?
Tweet media one
9
134
145
@Lakshmivva1
Lakshmivva
6 years
உனக்கும் எனக்கும் இடையில் கோடு கிழித்தாகிவிட்டது; கோட்டுக்கு நடுவில் பூத்து நிற்கிறது வரம்பு தாண்டிய நேசம்; எதை அழிக்கும் உத்தேசம் உனக்கு?.
Tweet media one
11
143
145
@Lakshmivva1
Lakshmivva
5 years
பசிக்குப் பறந்தவனுக்கு அயல் நாட்டில் ருசிப்பது தாய்மொழி மட்டுமாகத்தானே இருக்கும்?
Tweet media one
20
112
138
@Lakshmivva1
Lakshmivva
4 years
யானை மோதிய காரணத்தலேயே போருக்குப் போகத் தகுதி பெறுவதில்லை கழுதை
Tweet media one
19
80
133
@Lakshmivva1
Lakshmivva
6 years
ஆர்க்கிமிடீஸ் தத்துவம் உண்மைதான் போலும்! நீ எந்த அளவு எனக்குள் நுழைந்தாயோ, அந்த அளவுக்கு என் சுயநினைவு வெளியேறுகிறது.
Tweet media one
12
107
136
@Lakshmivva1
Lakshmivva
6 years
பெருத்துக் கொண்டே போகும் எரிபொருள் விலை; சுருங்கிக் கொண்டே போகும் ஏழையின் இரைப்பை.
Tweet media one
8
109
135
@Lakshmivva1
Lakshmivva
3 years
நாடோடிகளின் கூரையை விடவும் நம்மிடம் பெரிதாக என்ன இருக்கிறது
Tweet media one
20
72
141
@Lakshmivva1
Lakshmivva
6 years
நீ இறங்கிச் சென்ற பின்னும் ஆடிக்கொண்டேதான் இருக்கிறது உன் உந்துதலின் நினைவோடு மன ஊஞ்சல்
Tweet media one
10
116
138
@Lakshmivva1
Lakshmivva
3 years
கடை நுனி கிளையில் ஒட்டியிருக்கும் வரைக்கும் மலரின் தடுமாற்றங்கள் செடிக்கும் ஆனதே
Tweet media one
21
83
138
@Lakshmivva1
Lakshmivva
5 years
தீமுகில் உதிர்த்த ஆறெனப் பரந்த பாலைப் பெருமணலில் கொடூரத்திற்கு எதிராகப் பாலைச் சுரந்து பூத்திருக்கும் கள்ளிக்கு இனித்துக் கிடக்கிறது முட்கள்.
Tweet media one
24
94
135
@Lakshmivva1
Lakshmivva
6 years
அரசியல் வளர்க்கும் திரையுலகம்; திரையுலகம் வளர்க்கும் அரசியல்; இரண்டிலும் காணாமல் போகும் மக்கள்.
Tweet media one
11
113
131
@Lakshmivva1
Lakshmivva
6 years
என்னிடமிருந்து நான் உனை நோக்கிப் புறப்பட்டதை அறிவேன்; உன்னிடமிருந்து இன்னும் திரும்பவில்லை, அதை நீ அறிவாயா?.
Tweet media one
14
138
133
@Lakshmivva1
Lakshmivva
4 years
மிகச் சாதாரணமாகக் கடந்து வந்த சிலரைத்தான், மிகக் கவனமாக வாசிக்கிறோம் பலர் எழுத்துக்களில்.
Tweet media one
17
96
132
@Lakshmivva1
Lakshmivva
3 years
யாரைப் பார்த்தும் புன்னகைக்கிறது குழந்தை நமக்கு வாசிக்கத் தெரியாத மொழி அதற்கு வசப்பட்டிருக்கிறது
Tweet media one
18
84
130
@Lakshmivva1
Lakshmivva
6 years
தாத்தா, பாட்டியைப் போலவே இந்த வேப்ப மரங்களும் நிழலையும், பூக்களையும் உதிர்த்துவிட்டுக் காத்திருக்கின்றன சுற்றி வந்து விளையாடும் சிறுவர்களுக்கு.
Tweet media one
5
94
126
@Lakshmivva1
Lakshmivva
3 years
உங்கள் அன்பு இதுவரை கொண்டு சேர்த்திருக்கிறது. நன்றி நட்புகளே 😊😍🙏🙏
Tweet media one
70
86
132
@Lakshmivva1
Lakshmivva
4 years
தன்மீதே அமர்ந்தாலும் முள்ளால் குத்த முடியுமா பனித்துளியை ?
Tweet media one
17
71
132
@Lakshmivva1
Lakshmivva
6 years
உன்னால் கைவிடப்பட்ட நினைவுகள் உறக்க வீதியெங்கும் அலைகின்றன அனாதைக் கனவுகளாய்.
Tweet media one
7
111
128
@Lakshmivva1
Lakshmivva
5 years
பழகிய வலிதான்.. ஆனாலும், படும்போது சுழிக்கத்தான் செய்கிறது முகம்.
Tweet media one
13
107
123
@Lakshmivva1
Lakshmivva
6 years
மீன்களைப் பற்றிக் கடலிடம் கேட்காது, வலையிடம் கேட்கும் விசித்திர மனிதர்கள் நாம்.
Tweet media one
8
109
125
@Lakshmivva1
Lakshmivva
5 years
இல்லாத ஒன்றுதான் எத்தனை அழகாக இருக்கிறது உன்னைப்போல..
Tweet media one
22
142
125
@Lakshmivva1
Lakshmivva
6 years
வாழ்க்கை எனக்களித்த நாணயத்தில் நீ ஒரு புறம் நான் மறு புறம்; நீயில்லையென்றால் நான் செல்லாக்காசு.
Tweet media one
4
97
122
@Lakshmivva1
Lakshmivva
6 years
அமாவாசை, பிதுர்க்கடன் என்றெல்லாம் சொல்லிக் கரைந்து அழைக்கும் போதெல்லாம், "ஒரு வாய் சோறு உயிரோடு இருக்கையில் உருப்படியாகப் போடாத நீ சாவுக்குப் பின் என்னிடம் தேடுகிறாயே உன் தாயை, தகப்பனை " எனக் கேலி செய்யாதோ காகங்கள்.
Tweet media one
10
111
124
@Lakshmivva1
Lakshmivva
6 years
அவர்களுக்குத் தெரியாமல் வந்து, எனக்குத் தெரியாமலே போகிறேன்; இடையில் ஏதோ கூச்சல்.. என்னவென்றேன் வாழ்க்கையாம்.
Tweet media one
12
112
130
@Lakshmivva1
Lakshmivva
5 years
பரண்மேல் தூசுபடிந்த வெண்கல உருளி, பித்தளைச் சருவம், செம்புக் குவளை, கெண்டி; பொங்கலுக்கு வெள்ளையடிக்க ஒதுக்கையில் "இது ஆச்சி கொடுத்த சீர்" என்று சொல்லும்போது அம்மாவுக்கு விசாலமாகும் கண்களில் இருக்கும் பெருமை, கிடப்பில் போட்டுவிட்ட எந்தமிழ்ச் சொற்களறியும் தருணமாகவும் இருக்கிறது.
Tweet media one
12
78
123
@Lakshmivva1
Lakshmivva
6 years
நீ வேண்டாம் என்று முடிவு செய்தபின் இயல்பாகின எல்லாம் ; எல்லாம் இயல்பானதும் தோன்றுகிறது நீ வேண்டுமென.
Tweet media one
8
106
117
@Lakshmivva1
Lakshmivva
3 years
Tweet media one
47
53
122
@Lakshmivva1
Lakshmivva
5 years
#NewProfilePic #mysketch நல்லாருக்கா..
Tweet media one
74
60
121
@Lakshmivva1
Lakshmivva
6 years
நேற்று என்ற சுவை இன்றின் பசியை இட்டு நிரப்பவதில்லை; பசியெனும் சுவையோ நாளையின் இருப்பைக் கொண்டு தருகிறது.
Tweet media one
8
100
118
@Lakshmivva1
Lakshmivva
6 years
புரிதலில் இறுதி நிலை என்பது, ஏதும் தெரியாமலே இருந்திருக்கலாம் என்பதாகவும் இருக்கலாம்.
Tweet media one
6
129
117
@Lakshmivva1
Lakshmivva
5 years
தனிமையோடு உறவு கொண்டு இறுக மூடிய கைகளுக்குள் தொலைந்து போன சிரிப்போ, நாட்களோ இருக்கலாம்; ஏன்? நானே கூட.
Tweet media one
7
111
115
@Lakshmivva1
Lakshmivva
6 years
நேசம் மட்காதிருக்க நெகிழிப்பை நிரப்பினார்கள் போலும், கடற்கரையெங்கும்... அகம் நெகிழ்ந்தால் போதுமென உணரா மக்கள்.
Tweet media one
9
82
121
@Lakshmivva1
Lakshmivva
4 years
மூங்கிலின் பெரும் பயன் புல்லாங்குழலெனின், நீ காற்றேயல்லவா! நிலவின் குளிரெல்லாம் மண்ணின் பயனெனின், நீ கதிரேயல்லவா! மண்ணின் வாழ்வெல்லாம் நீரின் வளமேனின், நீ மழையேயல்லவா! இயற்கையின் சட்டகத்தில் ஓவியம் கலையெனின், நீ வண்ணமேயல்லவா!
Tweet media one
12
88
121
@Lakshmivva1
Lakshmivva
3 years
சுடுகாட்டில் பூச்செடி வளர்த்து நந்தவனம் என்று பெயரிடுபவனைவிட என்ன செய்துவிட முடியும் புத்தனால்
Tweet media one
11
66
115
@Lakshmivva1
Lakshmivva
4 years
வேப்பமரம் வெட்டப்பட்டது வேரோடினால் சுவருக்குப் பலமில்லை என்று மேற்கு மூலையில் மஞ்சளாகப் பூக்கும் மரம் நட்டாயிற்று ஏதாவது ஒரு விழா என்று சீரமைக்கிறார்கள் வீட்டை பாட்டியின், அம்மாவின் இறப்புகளுக்குப் பிறகு தானாகவே விரிசல் விடுகிறது வீடு வேர்கள் காடடைந்ததால்
Tweet media one
23
86
118
@Lakshmivva1
Lakshmivva
6 years
பூமி தன் பயணக் கட்டுரையை நாளெனும் பக்கத்தில் இரவு, பகல் மசியினால் எழுதுகிறது.
Tweet media one
15
103
111
@Lakshmivva1
Lakshmivva
4 years
மழைமேகம் வெயிலுக்கு ஒதுங்கியதுபோல் கோயில் வாசலில் யானை
Tweet media one
9
48
117
@Lakshmivva1
Lakshmivva
6 years
ஒரு கரையில் உன் நினைவு மறு கரையில் உன் கனவு இக்கரைக்கு அக்கரைப் பச்சையென நீந்தித் தவிக்கும் உயிர்
Tweet media one
11
102
113
@Lakshmivva1
Lakshmivva
5 years
அபத்தம் என்று சொல்லப்படுவதெல்லாம், அற்புதமாகிவிடுகின்றன.. உன் எல்லையைத் தீண்டவும்.
Tweet media one
13
90
112
@Lakshmivva1
Lakshmivva
6 years
உனைக் காயப்படுத்தாது, எனை இந்த நிமிடத்திலிருந்து கடத்திச் செல்லும் நொடிப் புள்ளிக்கு நூறு முட்கள்.
Tweet media one
5
117
112
@Lakshmivva1
Lakshmivva
3 years
இடமில்லா ஊரில் இடமில்லாதவர்களிடம் ஒதுங்குகிறது மழை
Tweet media one
16
81
119
@Lakshmivva1
Lakshmivva
3 years
வானத்தைவிட பெரிதாக பலூன் கேட்கிறாள் குழந்தை அவள் வானம் என்று சொன்னது இரு கைகளினிடையேதான் இருந்தது
Tweet media one
19
84
116
@Lakshmivva1
Lakshmivva
3 years
பெய்தலுக்கு மட்டுமே ஒப்பந்தமானவை மேகங்கள் நனைதலை நாம்தான் ஈட்டவேண்டும்
Tweet media one
21
74
119
@Lakshmivva1
Lakshmivva
4 years
என்ன பயிற்சியோ... வரிசையில் நிற்கின்றன நாற்றுகள்.
Tweet media one
20
50
111
@Lakshmivva1
Lakshmivva
6 years
எனக்காக எப்படியெல்லாம் இருக்கிறாய் நீ! என்ற வியப்பிருந்தாலும், நான் அப்படியெல்லாம் இருப்பதில்லை; அதனாலேயே நம் நாட்கள் இருக்கின்றன சலிப்புறாத பசுமையில்.
Tweet media one
10
101
113
@Lakshmivva1
Lakshmivva
6 years
அமைதியின் கூர்மையை நிறுவுதற்கு ஓர் ஊசியாவது சிதறவேண்டியிருக்கிறது.
Tweet media one
13
120
110
@Lakshmivva1
Lakshmivva
5 years
சொரசொரத்த கற்களைத் தள்ளுவதில்லை தழுவியோ, அடித்தோ வழவழப்பாகுகிறது நீர் அம்மாவைப்போல
Tweet media one
19
95
108
@Lakshmivva1
Lakshmivva
3 years
எங்க ஊர் தெப்பக்குளம்
Tweet media one
25
34
114
@Lakshmivva1
Lakshmivva
5 years
எங்கோ நகர்ந்திருக்கும் என திரும்பும் வேளையில் நீருக்குள் இருக்கும் அரவம் மூச்சு விட தலையை தூக்கி இருப்பை உணர்த்துவது போல மனம் மூழ்கி எழும் உனது நினைவு
Tweet media one
12
90
113