அழகரசன் Profile
அழகரசன்

@KidambiGm

2,010
Followers
1,422
Following
3,363
Media
86,934
Statuses

Sundararajan Kidambi, Chess Grandmaster, Chennai தாயைப் போற்று , மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள், நாமேல் நடவீர் நடவீர் இனியே,

Chennai, India,தமிழ் நாடு
Joined November 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@KidambiGm
அழகரசன்
4 years
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"- பேராசான் வள்ளுவர்
4
51
96
@KidambiGm
அழகரசன்
19 days
கருணா நிதியே கனிமொழி பாடு மருணான் மறையின் பழநீ - திருவா ரெமிராமச் சந்திர னின்ப மருகா சமரா செயலலி தா
Tweet media one
10
43
446
@KidambiGm
அழகரசன்
7 months
வாளெடுத்துப் போர்தொடுத்து வாகைசூட வழியிலா மானுடற்குப் பாத்தொடுக்கு மாண்பளித்து வாழ்விலே தானகற்றித் தாள்பணிந்துன் னாமமென்றுஞ் சொல்லவே அருளாயோ
Tweet media one
7
39
422
@KidambiGm
அழகரசன்
4 months
தாயுலா வேதவா வாதுகா வேடவா தீயதீ தீயதீ வாடவே காதுவா வாத வேலாயுதா #மாலைமாற்று
Tweet media one
5
24
383
@KidambiGm
அழகரசன்
1 year
திருத்தணிகை சென்று திருமருகைக் காண அருட்கோலம் நின்ற அறுமுகனைக் கண்டு செருக்கழிய நின்று திருவருளைப் பெற்று விருப்பமென தின்று விளைந்ததது நன்று - கலி விருத்தம்
Tweet media one
16
44
345
@KidambiGm
அழகரசன்
1 year
ககக்கோக் குகக்கோ ககாக்கக் ககுக்குகை கூக்குகக்க ககக்கோக் ககக்குகு கைக்கைகை காக ககாகுகக்கோ ககைக்கோ குகைக்கோ ககக்கோகிக் கூக்கை ககக்குக்குகா ககக்கைக் ககைக்கோக்கு கூகாக்கக் கேகிக்கோக் கூக்கிகைக்கே -கட்டளைக் கலித்துறை
Tweet media one
Tweet media two
23
101
315
@KidambiGm
அழகரசன்
1 year
வாழ்வது சாவாகத் தோன்றுந் தருணத்திற் சாவதும் வாழ்வாகுஞ் சண்முகா - வீழ்வ துறுதியென்று முன்றா டுதிக்கும் பணியே உறுதுணை என்றுணர்வ தென்று -வெண்பா
Tweet media one
22
43
306
@KidambiGm
அழகரசன்
7 months
செய்யாளி னொய்யார மைதீட்டும் வைவிழி்யா ளையணங்கைக் கைபிடிக்கு மையவனை - மெய்யாரப் பொய்யகலக் கைதொழுகை செய்யாமல் வைதாலு மெய்யருள்வான் மைம்மழையாய்ப் பெய்து #வெண்பா
Tweet media one
6
37
295
@KidambiGm
அழகரசன்
1 year
ஐயாறெட் டோது மறிவில்லை யென்று மகமுருகி மெய்யாறுன் நாமம் விளிக்க வுமிலை வினையறுக்கும் பொய்யா மொழிப்பு லவருரை சற்றும் பொருந்தவில்லை உய்யுமா றீனற் குரைப்பா யுழலு முலகினிலே - கட்டளைக் கலித்துறை
Tweet media one
14
36
280
@KidambiGm
அழகரசன்
1 year
வேலும் மயிலும் துணைநமக்கு வேலன் உருவை மனநிறுத்து நாலும் இரண்டும் உடனிருக்கும் ஞானம் மிளிரும் ஒளிவிளக்கு காலம் கனியும் பொறுவதற்கு காசும் பணமும் இனியெதற்கு பாலும் பழமுங் கொடுயிறைக்கு பாதம் பணியும் மனம்வளர்த்து -அறு சீர் விருத்தம்
Tweet media one
7
34
262
@KidambiGm
அழகரசன்
7 months
எழுத்தறியா வேழை யிறையருட் பெற்றாற் பழுத்த புலவனாய்ப் பாரோர் வழுத்த பகரச் சுவையாய்ப் பரமன் புகழைச் சிகரந் தொடலாஞ் சிறந்து #வெண்பா
Tweet media one
7
37
270
@KidambiGm
அழகரசன்
6 months
ஞானக் கொழுந்திற்கு ஞாலப் பிதாவன்னை ஞானப் பழந்தர ஞாலத்தை ஞானப் பழஞ்சுற்றித் தோற்றுப் பழநிநின்றான் பெற்றோர் தொழுஞ்சிறப்பைச் சொல்ல புவிக்கு
Tweet media one
4
20
256
@KidambiGm
அழகரசன்
4 months
மலைத்தே னனைய மலைத்தே விருக்க மலைமலையா யலைத்தே திரிந்து மலுப்பே துமில்லை யலைக்கரையின் றலைத்தே வழைக்கத் தலைத்தேவை சென்று தலைவணங்க னிலத்தே நிலைக்க நிலைத்தே நினைப்பி னிலைமனனே #கட்டளைக்கலித்துறை
Tweet media one
5
27
259
@KidambiGm
அழகரசன்
1 year
மருணீக்கும் வேலன் மலரடிகள் போற்றி மருட்பா அமைக்க மனமும் - இருணீங்கி பத்தியில் தழைக்கும் பாவில் முத்தியை அருள்வது முருகன் விருப்பே -மருட்பா
Tweet media one
8
35
232
@KidambiGm
அழகரசன்
7 months
மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
Tweet media one
11
39
243
@KidambiGm
அழகரசன்
1 year
பித்தன்மகன் சினங்கொண்டுச் சித்தமெலாம் பேதளித்தே அத்தனையுந் துறந்தன்றோ ராண்டியானா னன்றோடீ சித்தனுக்குஞ் சித்தளிக்கும் வித்தகனா மாண்டியவன் பத்தனுக்கு நித்தமருட் பாலிப்பான் சாழலோ #சாழல்
Tweet media one
13
29
228
@KidambiGm
அழகரசன்
1 year
அயர்வுறுஞ் சீவற் கருள்தர வல்ல வுயர்வனை யின்றெண்ணி யுய்வோம் - துயருற்ற வாகாச வாசி யகங்கா வவதரித்த வைகா சிவிசாக வேந்து -வெண்பா
Tweet media one
11
30
218
@KidambiGm
அழகரசன்
1 year
தாதுதைத்த தீதுதித்து தத்தொத் ததிதாதா தீதுதித் தீதை திதிதுதை - தேதுதி தீதுத்து தித்தத் திதத்தாதை தாதத்தித் தேதுதித்து தித்த திதி -வெண்பா
Tweet media one
11
55
231
@KidambiGm
அ��கரசன்
8 months
ஆறாளு நாதன் மடியமர்ந் தோது மரும்பொருளும் ஆறாளு நாதன் மனமுவந் தீன்ற வடியவராம் ஆறாளு நாத னடிபணிந் தேத்த வமுதமொழி ஆறாளு நாத னருணை முனிக்கு வழங்கினனே #கட்டளைக்கலித்துறை
Tweet media one
10
42
229
@KidambiGm
அழகரசன்
5 months
முந்தை வினையகல நந்தை தினத்தாள்வோன் எந்தை முருகனுக் கேற்றவாறு தந்தளிக்க விந்தை தமிழ்ப்பாவை மேன்மை மனநிறுத்திச் சிந்தை சிறந்திடச் சொல் #வெண்பா நந்தை -சஷ்டி
Tweet media one
3
34
230
@KidambiGm
அழகரசன்
1 year
இருள்சூழ்ந்த வாழ்வி லிணைதேடு மெண்ணம் பொருளற்ற வெற்றுப் புனைவு - அருளொன்றே காக்கு மறுமகனின் காட்சி மருளென்றும் நீக்கு நிகரில் மருந்து - வெண்பா
Tweet media one
16
37
220
@KidambiGm
அழகரசன்
4 months
உலைவாய் முலைவா யலைவாய் மலைவாய் குலைவாய் விழைவின் விளைவாய் - மலைவா டலைவாய் தொலையா நிலைவா யலைவாழ் வலைவா யிலைவா யருந்து #வெண்பா
Tweet media one
6
30
221
@KidambiGm
அழகரசன்
4 months
குருவாரஞ் சென்று குருபரனைக் காணத் தருவானா ஞானந் தருவாய்ச் - செருநாதன் மஞ்ச ளலங்கார மங்கலந் தான்றருமே சஞ்சலஞ் சாரா தகம் #வெண்பா
Tweet media one
8
23
218
@KidambiGm
அழகரசன்
1 year
பத்திரதப் புத்திரனின் பத்தனவன் சித்தமுறை பத்திரத மொத்ததொரு பத்திபெறச் சித்தகுரு முத்திதருந் தத்துவனை முத்தையனை நித்தமுள தத்தளிக்கும் பத்தனுய்ய சத்தியளி வித்தகனே - கலி விருத்தம்
Tweet media one
11
34
212
@KidambiGm
அழகரசன்
1 year
பொய்ப்பொழிந் தாசு புகழுரைத்த தன்பின்னே மெய்ப்புணர வேண்டுமே வேல்மயிலே - உய்த்துணரு மாறு உயிரை யறுமுகன் செய்வனோ மாறா மறைப்பதத் தூடு -வெண்பா
Tweet media one
12
29
204
@KidambiGm
அழகரசன்
1 year
மூவாறு மெய்யுமுள மூவாக் கிழவனை யாவாவென் றர்ச்சித் தகமகிழ - பாவேட்டி னீரா றுயிரு மிளங்கோவை யேத்தவே போரேவு மாய்த மயில் - வெண்பா
Tweet media one
10
24
195
@KidambiGm
அழகரசன்
1 year
காரோட்ட வாழ்வில் கலங்கா துனது கழல்பெறவே சீராட்டு மன்னை திருவாய் முகிழ்ந்து திகைக்கவைத்த பாராட்டு மேசு பகைச்சொல்லு வேறிலாப் பார்த்தனுக்குத் தேரோட்டு மீசை தயிர்வண்ண கோவெமைத் தேர்ந்தருளே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
10
23
203
@KidambiGm
அழகரசன்
8 months
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே #கட்டளைக்கலித்துறை #ஏகபாதம்
Tweet media one
6
29
206
@KidambiGm
அழகரசன்
1 year
சிற்றஞ் சிறுகாலே சிந்திக் கிலேனுனை இற்றைப் பிறவி இருந்தென்னே - பற்றும் நமரி னிடர்தீர்த்து நல்லா றமைக்கும் குமரனடி காக்குங் குடை - வெண்பா
Tweet media one
9
26
202
@KidambiGm
அழகரசன்
7 months
மாசி மகத்து மகத்தறிந் தேத்துவோங் காசினி யாளுங் குமரியை - ஆசிபெற வாசமல ரென்றே மனமளிப்போம் பத்தியினின் மாசி மகத்து மகட்கு #வெண்பா
Tweet media one
8
16
206
@KidambiGm
அழகரசன்
1 year
திங்கட் பிறையுஞ் சிகைமே னதியணியு மங்கட் பரம ரருட்செல்வன் - செங்கண் டிருமான் மருகன் தினைப்புன மாதை விரும்புந் திருடன் விழைவு - வெண்பா
Tweet media one
11
28
194
@KidambiGm
அழகரசன்
4 months
தினையரசி தெய்வானை சேர்ந்திருக்குந் தேவ வினையகற்றும் வேழமுகன் வேண்டு - மினியகனி யீசனுமை யீய விடம்பெயர்ந்த வின்றமிழி னேசவுனை நேர்ந்துரைப்பே ணீண்டு #வெண்பா
Tweet media one
8
26
206
@KidambiGm
அழகரசன்
9 months
திருவாலி நாடனைச் செந்தமிழ்ப் பாடத் திருமாலின் கீர்த்தியைத் தேர்ந்து - குருவாய்த் திருமாலே எட்டுஞ் செபித்துவந் தானை ��ருபோது மாறிலா வுள்ளு #வெண்பா #கலியின்
Tweet media one
9
27
198
@KidambiGm
அழகரசன்
5 months
சங்கரியைக் கைப்பிடித்த சங்கரனை யெங்குமுறை சங்கரியின் சோதரன் சங்கரியைப் - பங்கயனைத் தெள்ளறி வீவாளைச் செய்யாளைச் சங்கரியை யுள்ளடக்கு நாம முருகு #வெண்பா
Tweet media one
4
25
199
@KidambiGm
அழகரசன்
1 year
வேலை வேண்டு மென்றி ளைஞர் வேலை வேண்டு மென்றே சுற்றி வேலை வேண்டு மென்றி லாது வேலை வேண்டு மொன்றே வுய்வாம் -கலி விருத்தம் வேலை- தொழில், கடல், காலம், வேல் + ஐ
Tweet media one
9
28
189
@KidambiGm
அழகரசன்
10 months
அடியார் அணைக்க வமைதி நிலவும் படியி னிறைவு படரும் - இடியா யவுண ரழிய வயில்வே லெறிந்த மவுனகுருக் காசான் றமக்கு #வெண்பா
Tweet media one
8
27
188
@KidambiGm
அழகரசன்
1 year
இன்னொரு செனனமதை ஏற்றுழல் அவத்தைதனைத் தன்னிகர் இலிமுருகா என்றனுக் கருளுவையோ முன்னிரு வருவினைகள் தன்னிலை அழிந்தொழிய சென்னியில் உனதிருதாள் சீக்கிரம் அருளுவையோ -கலிவிருத்தம்
Tweet media one
10
33
187
@KidambiGm
அழகரசன்
1 year
முத்தா யடியெடுத் தூட்டி யமுத ருணகிரிக்குப் பித்துந் தெளிய பிரானைத் துதிக்கும் பிறங்குமதி வித்தென உள்ளே இருந்தீ தனைவீடோ ராறுடைய எத்தனை சென்மம் எடுப்பின் உடன்வா இறைவநீயே -கட்டளைக் கலித்துறை
Tweet media one
10
27
178
@KidambiGm
அழகரசன்
1 year
மன்றாடும் ஆடவர் மாரனைச் சுட்டெரித்த வென்றாடி நின்ற விரிசடையார் - ஒன்றாக நங்கைக் குருதந்த ஞாலத் தலைவரின் மங்காப் புகழை வணங்கு -வெண்பா
Tweet media one
13
24
185
@KidambiGm
அழகரசன்
1 year
ககுக்குகைக் ககக்க காக்க ககக்கோக் குகக்கோ குகக்கோக் ககக்கூக் கொக்ககூ கூகாக்க ககக்குகக் கோக்ககக் கூகூ -வஞ்சி விருத்தம் ஏக அக்ஷரம் ககர வருக்கப்பாடல்
Tweet media one
12
52
179
@KidambiGm
அழகரசன்
8 months
ஆலமுண்ட நாதனி னம்சமாக வந்தவன் ஞாலமுண்ட நாதனி னற்பணிகட் செய்யவே பாலமொன்று தேவையோ பங்கயனின் சீடனே வாலமொன்று போதுமே தென்னிலங்கைத் தீயவே #கலிவிருத்தம்
Tweet media one
9
35
186
@KidambiGm
அழகரசன்
7 months
உறங்கா தராமே லுறங்கா துறங்குஞ் சிரங்கா விரிக்கண் கிடந்தா யனந்தா வறங்கா மறங்கா வரம்பே விளங்காத் திருந்தா வினங்கா துரங்கா வரங்கா #புஜங்கம்
Tweet media one
7
25
185
@KidambiGm
அழகரசன்
4 months
காழியா வேதியா வாதவே றாசிதே வாதிதே தேதிவா தேசிறா வேதவா யாதிவே யாழிகா #மாலைமாற்று
Tweet media one
6
20
183
@KidambiGm
அழகரசன்
4 months
சிவந்த வுடையுடுத்துஞ் சேயனைக் காணப் பவந்தருமு ரோகம் பறக்கு - நவந்தரு நல்வாழ்க்கை நாளெல்லா நாமுணர்வோ மீதிருக்கச் சொல்வாழ்வி லுண்டோ துயர் #வெண்பா
Tweet media one
4
26
182
@KidambiGm
அழகரசன்
5 months
ஆயக் கலையாவு மாய்ந்தணர வாயுளிலை மாயவலை வாழ்வின் மயங்கியதால் - சேயுணர்வின் முத்தாண்டு சீர்விளங்க முப்பொழுதுஞ் செந்தமிழ்ப் புத்தாண் டணிவகுக்கும் பூத்து #வெண்பா
Tweet media one
9
19
178
@KidambiGm
அழகரசன்
1 year
காத லெனவுங் கனவுக ளென்றுங் குவலயத்தின் மோத லெனவு மொருமை எனவு முழலுமுளஞ் சாத லெனவுஞ் சனன மெனவுந் தளையகலா தாத லினாலயிற் கொண்ட ருடருவா யன்புருவே - கட்டளைக் கலித்துறை
Tweet media one
12
24
170
@KidambiGm
அழகரசன்
4 months
தேவானையுதவு தீவானினிலவு மாவாதினடைவு தேவாரையுதவு தேவானையுறவு மாகேசனறிய தேவானையுரிய ஞானாசன்கிரியி னாவாரமொழியு மாவேதவடைவு மூவானைநினைவு தாவாதுமொழிவ னே #கலித்தாழிசை
Tweet media one
7
19
175
@KidambiGm
அழகரசன்
1 year
சடங்கேதும் வேண்டா சணப்போதில் தோன்றும் இடங்காலம் தாண்டி இமையோர்கள் ஏத்தும் நடசிம்மம் என்னு நரர்காக்கும் தேவன் குடன்மாலை பூணும் குறைதீர்க்கும் நாதன் -கலிவிருத்தம்
Tweet media one
8
17
156
@KidambiGm
அழகரசன்
1 year
சிவயோகஞ் சொல்லுஞ் சிவகாமி மைந்தன் பவரோகந் தீர்க்கும் பரமன் - நவநீதக் கள்வ னடமாடுங் கண்ணன் மருகோனே உள்ளத் துறைவாயே வந்து -வெண்பா
Tweet media one
7
25
150
@KidambiGm
அழகரசன்
1 year
குணத்தைப் படைத்த குகன்வழி செல்க இணக்கந் தருவ திறையாம் - மணத்தை பகுத்தாய்ந் துளதோ பயனும் வகுத்தான் வகுத்த வழியே வழி -வெண்பா
Tweet media one
10
19
155
@KidambiGm
அழகரசன்
1 year
முருகா குமரா முழுமுதற் கேள்வா முராரிதிரு மருகா பொருதாயே முந்நீர் வறள முரசதிர சருகாய்ச் சிதைத்தா யசுரர் படைகள் தடம்புரள ஒருகா லுனைநான் மறந்தா லுமாற்றெனை உள்ளமர்ந்தே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
9
24
152
@KidambiGm
அழகரசன்
3 years
தக்கார் ம சோ விக்டரின் கருத்துகள் , ஒரு சீன பழமொழி 1/3
3
88
154
@KidambiGm
அழகரசன்
1 year
வீண ருரைக்கும் வெறுஞ்சொ னினைந்து வினைபுரியா நாணத் தகுமொரு நாத்திக வாழ்வி னடம்புரியாக் காணக் கிடைத்த கடம்ப னழகைக் கவின்மொழியாற் பாண ரனைய பலவகைப் பாவமைப் பண்ணிசைத்தே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
7
24
151
@KidambiGm
அழகரசன்
1 year
மாலை யகற்றி மனத்தூய்மை பெற்றிட வையமதின் மாலை யகற்றி னமேற்றி வழிபடு மாண்பருட்கா மாலை யகற்றி வடிவனை யென்றும் வணங்குருகு மாலை யகற்றி யமனு மியலா வணமருளே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
10
19
150
@KidambiGm
அழகரசன்
4 months
மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை யோயாம லுள்ளத்தி லுள்வார்க்குத் - தாயாகித் தந்தையாய்த் தாகந்தீர் தண்ணீருந் தானாகிச் சிந்தையாள்  சீரளிப்பான் சேய் #வெண்பா
Tweet media one
10
24
158
@KidambiGm
அழகரசன்
1 year
நாடும் பொருளையே நாடி விழுந்தாலும் ஞானமிலாச் சூடு படினும் சுவையில் மயங்கி துதிக்கவல்ல பீடு பொருளைப் பிரானை நினைந்து ருகாதவெனை வீடுறச் செய்யநீ மேற்கொளும் பாடென்னே வேலவனே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
13
21
141
@KidambiGm
அழகரசன்
1 year
அனாதியான ஆதியே ஆண்டி, மணாளா எனாதி வினைகளை யீசா -இனிவாழ்வு நீதருவ தொன்றே நிலையுணர்ந்து நிற்பனோ தேதிவருஞ் சேதிவரை சீர் -வெண்பா
Tweet media one
Tweet media two
7
30
145
@KidambiGm
அழகரசன்
1 year
குருவாய் வருநங் குகனைப் புகழ்ந்து தருவா யொருபா தருணம் புனைந்து விரும்பும் வகையில் வினயங் கலந்து தெருளுந் தெளிய வருள்வான் மகிழ்ந்து -கலிவிருத்தம்
Tweet media one
4
28
140
@KidambiGm
அழகரசன்
1 year
ஆண்ட னுபவித் தலைபாயு மெண்ணங்க ளார்ப்பரிக்கும் ஈண்டிப் பிறப்பை யிறையுண ராதிழப் பேனென்றிலா மீண்ட கமாற வழியளித் தாட்கொண் டருடருவாய் வேண்டும் வரம்தரும் வேலேந்து முக்கண்ணன் றீமகனே - கட்டளைக் கலித்துறை
Tweet media one
8
25
143
@KidambiGm
அழகரசன்
6 months
வினையாளும் வாழ்வி லுனைநாடா வீழ எனைமாள வைக்கா திறைவா - தினையாளுந் தேவி கணநீங்கா தேவ வுனைப்பாட ஆவிக் கருடந்தா யாண்டு #வெண்பா
Tweet media one
4
24
149
@KidambiGm
அழகரசன்
1 year
பாராளும் பொன்முடியும் பாழாகு மென்றுணர்ந்து பாராளும் நன்கமைத்த பாமாலை - நாரணன்மேற் பத்திரச மேலோங்கு பாவை யுறுதவத்தைச் சித்தமுறை செய்வாய் சிறந்து -வெண்பா
Tweet media one
3
22
143
@KidambiGm
அழகரசன்
8 months
அஞ்சக் கரத்தானை யஞ்சிற் கரத்தானைக் கஞ்சப் பதத்தானைக் கஞ்சன் சினத்தானை வஞ்சிப் பிரியானை நச்சுப் புனைவானைச் செஞ்சொற் கவியேத்தித் தஞ்சம் புகுவோமே #கலிவிருத்தம்
Tweet media one
6
28
142
@KidambiGm
அழகரசன்
1 year
மனத்தினால் சிந்தித்து வாயினால் பாட தனது தரிசனம் தந்தான் - கனவினில் வேலேந்தும் நாதன் விரும்பி அருளினான் மேலோங் கரவின் வடிவு -வெண்பா
Tweet media one
7
25
138
@KidambiGm
அழகரசன்
1 year
நீர்வண்ணன் நிற்க நடந்தான் உலகளங்தான் பாற்கடல ரங்கன் படுத்திருக்க - நீர்மலையில் சாந்த நரசிம்மன் தான்றோன் றியிருக்க மாந்தர்க் கருள்புரியும் மால் - #வெண்பா
Tweet media one
6
25
134
@KidambiGm
அழகரசன்
3 years
தஞ்சை #பெருவுடையார் கோயிலின் கட்டுமான நுட்பங்கள் - ஐம்பூதங்களின் ஆராதனை. திரு #குடவாயில்_பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கங்களுடன் 🙏🏿🙏🏿 1/n
2
76
132
@KidambiGm
அழகரசன்
1 year
கரும வசவா கலவி விலக வாசவ மருக வருக வருடா தொலைவ வலைதொ டாருவ கருவ மருத சைலவா சதப பதச வாலசை தரும வருதி யகதீ திறவ வறதி தீகய திருவ - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் #மாலைமாற்று
Tweet media one
11
22
126
@KidambiGm
அழகரசன்
1 year
துதிக்கை யழகன் றுதிக்கை யளிக்கு மதிக்கை மறவா திரு -குறள் வெண்பா துதிக்கை அழகன் துதிக்கை அளிக்கும் மதிக்கு ஐ மறவாது இரு
Tweet media one
7
22
127
@KidambiGm
அழகரசன்
1 year
அரனார் உமைத்தம் மகனாக அன்றழைக்க அமையார் அதைத்தம் விழைவாக ஒத்திசைக்க வருவோம் அரர்தம் மகனாக என்றுரைத்து மடவாள் தமக்கும் வழியாக வந்துதிக்க
Tweet media one
11
26
126
@KidambiGm
அழகரசன்
1 year
மூன்றடியால் விண்ணு மண்ணும் முன்பொருநாள் அளந்த வண்ணம் மாவலியை உன்னருளால் அமரச் செய்தாய் உள்ளுலகம் பத்தற் களித்த வாக்கதனால்
Tweet media one
7
20
125
@KidambiGm
அழகரசன்
1 year
கோதிற் கிழவ குமரப் பருவ குணமொழுகி கோதிற் கிழவ குமர னறியா குழம்பிநிற்க கோதிற் கிழவா குமரா வெழுப்ப குவலயமே கோதிற் கிழவா குமரா வெனவே குதித்தெழுமே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
9
26
118
@KidambiGm
அழகரசன்
1 year
தந்தியு நந்தியுஞ் சந்ததஞ் சிந்தையில் அந்தமிற் பந்தமாய் வந்துறை - அந்தரி நந்தனன் கந்தனின் வந்தனம் தந்தரு ளுந்துர முந்துவந்து வந்து -வெண்பா
Tweet media one
9
22
123
@KidambiGm
அழகரசன்
8 months
இராம லொழிந்தா னிலங்கை யரச னிராம லொழியு மிடரு - மிராம விராம வெனவே யிடைவிடா தேத்த விரைவில் வருவான் கவி #வெண்பா
Tweet media one
7
23
122
@KidambiGm
அழகரசன்
1 year
எண்ணிறந்த தத்துவம் ஈடிலாத வுத்தமம் பண்ணறிந்து பாடுவோர்க் குவந்தளிக்கு மூலமாம் மண்ணிரந்த நாதனும் மலரமர்ந்த வேதனும் விண்ணுமண்ணுந் தேடி��ுமுன் னடிமுடியைக் கண்டரோ - கலி விருத்தம்
Tweet media one
10
21
119
@KidambiGm
அழகரசன்
9 months
மீனமாகி தென்னனுய்ய விளங்கநின்ற மாதவா மேருதாங்கு மாமையாக வீற்றிருந்த தேவனே ஏனமாகிப் பூமிதன்னை ஏற்றிவந்த காதலா வெகுண்டெழுந்த சிங்கமாக வீழ்த்தினா யவுணனை 1/4
Tweet media one
5
20
122
@KidambiGm
அழகரசன்
1 year
தான வகுல விநாசக சாகச நாவி லகுவன தா #மாலைமாற்று வெண்பா
Tweet media one
11
18
118
@KidambiGm
அழகரசன்
1 year
அற்றைக் கிரைதேடி அல்லற் றிரைமூடி வெற்றுப் புகழ்தேடிக் குற்றப் பொருட்டேடி உற்ற பொருள்யாவும் சற்றுந் தொடராதென் றெற்றைக் குணர்வேனோ ஈசற் குருநாதா -#கலிவிருத்தம்
Tweet media one
8
21
115
@KidambiGm
அழகரசன்
6 months
மாமகிழ் மாறன் சிறப்பை யுரைத்த மரத்தடியின் மாமகிழ் மாறன் சிறப்பை யுரைத்த மதுரகவிப் பாமகிழ்ந் தோத படிமீ ளுதித்த பனுவலினை நாமகிழ்ந் தோத நரவாழ் வெடுத்தோ நனிசிறப்பே #கட்டளைக்கலித்துறை
Tweet media one
9
19
117
@KidambiGm
அழகரசன்
1 year
வேட்டுவனாய் வந்தவனாங் கோட்டின்மீ துறைபவனா மேட்டுறையும் பாட்டவன்மே லியற்றுவது மென்னேடீ வேட்டுவனா மாக்களுக்கு கோட்டுறைவா னுயர்வளிக்க வேட்டுறையும் பாட்டவனின் நாட்டங்காண் சாழலோ #சாழல்
Tweet media one
12
16
112
@KidambiGm
அழகரசன்
6 months
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நினைமனனே #கட்டளைக்கலித்துறை
Tweet media one
5
29
120
@KidambiGm
அழகரசன்
1 year
தேவர்க் குலங்காத்த சேவற் கொடியோனைச் சேவிக்க நாளுஞ் சிறப்பாமே - ஆவிற் கிதையன்றி ஆறும் எளிதன்று பாவஞ் சிதைந்தெழச் சித்தந் தெளிந்து
Tweet media one
11
11
107
@KidambiGm
அழகரசன்
1 year
கார்த்திகை மைந்தன் கருணை பொழிந்திட வார்த்தை இனிமை மலர்ந்தெழுமே - பார்த்தற்(கு) இரதங் கடவும் இறைமருகன் பக்தி இரதம் அருள்வனோ இன்று - வெண்பா
Tweet media one
5
18
105
@KidambiGm
அழகரசன்
1 year
கயநா யகதந் தவேகா னனகாவே தந்த கயநா யக - #மாலைமாற்று குறள் வெண்பா
Tweet media one
10
17
107
@KidambiGm
அழகரசன்
1 year
கந்தபந்து விந்தைதந்தி வஞ்சிநெஞ்சி லஞ்சலெஞ்ச முந்திவந்து வந்துவந்தெ மெந்தைசிந்தை நந��துமுந்து தந்துவந்த இந்துதந்த நந்திநந்த சந்தமுந்த சிந்துதந்து புந்திவந்த மர்ந்து -வெண்பா
Tweet media one
Tweet media two
3
13
104
@KidambiGm
அழகரசன்
3 years
#தேயம் எனும் தமிழ்ச் சொல்லின் விளக்கம் ஐயா ம சோ விக்டர் அவர்கள்
1
42
106
@KidambiGm
அழகரசன்
3 months
கூடேறி நின்று குவலயத்தே வாழ்வெடுத் தீடேறி யென்று வினையறுமோ - வீடேற வைகுந்தன் றாள்பற்றி வையகத்தை விட்டொழியச் செய்கின்ற சேவைசெயச் செய் #வெண்பா
Tweet media one
4
12
102
@KidambiGm
அழகரசன்
3 years
"அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி !" மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவை போற்றுவோம். திரு கோ தெய்வநாயகம் அவர்கள் 🙏🙏
2
56
101
@KidambiGm
அழகரசன்
4 months
மாமகிழ் மாறன் மதுரமொழி யாயிரம் பாமகிழ்ந் தோதுவர் பார்முழுது - நாமகி ழன்னையா யத்தனா யாண்டுவக்குந் தென்குருகூர் மன்னனு மாதவனு மொன்று #வெண்பா
Tweet media one
Tweet media two
3
13
100
@KidambiGm
அழகரசன்
1 year
தன்னை நன்றாய்த் தமிழ்செய மூலனைப் படைத்தான் சகத்தினில் தன்னை வைதார் வளமுற தமிழென் றிருந்தால் அருள்தரும் தன்னைத் துதிசெய் பக்தர்க்குச் சங்கத் தமிழ்மூன் றருள்தரும் முன்னை செல்லும் தமிழ்த்துதி பின்னை தொடர்வான் பரமனும் #தமிழ் -அறுசீர் விருத்தம்
Tweet media one
Tweet media two
4
14
98
@KidambiGm
அழகரசன்
1 year
சிறுமையிலை அருமயிலை தினமேறும் பெருமைமிகு இருமயிலை மணமுடித்த இளமயிலை ஈன்றெடுத்தத் திருமயிலை தனில்வசிக்கும் திருமயிலைத் தினம்தொழவே வறுமையிலை பகைமையிலை மறுமையிலே பயமுமிலை -தரவு கொச்சகக் கலிப்பா
Tweet media one
Tweet media two
7
17
96
@KidambiGm
அழகரசன்
1 year
முக்கா லறிந்த முழுமுதற் கோவை யுளமுருகி இக்கோலங் காண இளமதி யைப்பூணும் ஈசனடி எக்காலு மாடும் விடைபாகன் லீலை விரும்பிபெற நெக்காடு நாகம் நகைபூணு நாதா நிதமருளே -கட்டளைக் கலித்துறை
Tweet media one
8
13
86
@KidambiGm
அழகரசன்
2 years
The World Champion shared great wisdom in his comments. His mention of Karpov's win versus Kamsky from their 1996 World title match where he manoeuvred his King to d8 and then to f8 showed his unparalleled grasp of classics! Karpov, Kamsky and Carlsen would have carried on 1/2
@chess24com
chess24
2 years
"Be a shark!" says Magnus in his last words, saying that he would have started playing for a win in Nepo's shoes after Hikaru spoilt his advantage: #c24live #FIDECandidates
Tweet media one
11
14
235
5
11
93
@KidambiGm
அழகரசன்
1 year
அறுபத மென்றே யருணையி லன்ற ருணைமுனிவற் கறுபத வேலன் அளித்த அருமறை மந்திரத்தை அறுபத கத்தார் அகஞ்சூழ்ந் தழுமுன் அறிந்தெழுவாய் அறுபத மொய்க்க வடங்கு முடலீற் றிலென்றுணர்ந்தே -கட்டளைக்கலித்துறை
Tweet media one
9
16
90
@KidambiGm
அழகரசன்
1 year
ஓங்கார ஆனைமுகன் உத்தமனாம் ஆறுமுகன் பாங்கான மங்கையொரு பங்கனும் - தீங்காற நன்னெறியை நீசனுக்கு நன்குரைக்கும் ஆசானும் உன்னிப்பார் வேறல்ல ஒன்று -வெண்பா
Tweet media one
5
11
85
@KidambiGm
அழகரசன்
1 year
படைப்பவனைச் சிறைப்படுத்தும் பண்பிலாப் பாலகனாம் நடிக்குமயி லேறிநொடி ஞாலவல மழகோடீ படைத்தவனும் பிரணவத்தின் பொருளறியா துழன்றனனே நடிக்குமயி லோங்கார நயவடிவாஞ் சாழலோ - தரவு கொச்சகக் கலிப்பா #சாழல்
Tweet media one
Tweet media two
12
13
87
@KidambiGm
அழகரசன்
1 year
வெப்புற்றுஞ் சென்றுள்ளேன் வேல்வேந்தன் சீர்பொற்றாள் செப்புஞ்சொற் றெள்ளுள்ளுஞ் செய்வாய்நன் -றப்பேந்தும் முக்கண்ணப் பர்நெற்றிக் கண்ணிற்றோன் றுங்கந்தன் றிக்கற்றோற் கென்றுந்தித் திப்பு -வெண்பா
Tweet media one
5
24
86
@KidambiGm
அழகரசன்
1 year
ஓங்கார மயிலூர்தி உமைபாலா பாங்கான மலர்ச்சூடும் படைவீரா தேங்காது மமகாரந் தகர்வேலா நீங்காது மனக்கல்லில் நிறைவாயே -வஞ்சி விருத்தம்
Tweet media one
7
14
87
@KidambiGm
அழகரசன்
1 year
ஆலமரா மௌனகுரு வேலைவிட முண்டகண்டா ஓலமிடு மாக்கட் குயர்கதியே - கோலமயில் நின்றதவம் சித்திபெற நீயருள் தந்தவா றென்றனையு மாட்கொண் டிசை -வெண்பா
Tweet media one
Tweet media two
11
17
79
@KidambiGm
அழகரசன்
1 year
ஆடும் பரியேறும் ஆனை முகற்கிளைய வேடர் குலமாதை வேண்டிக் கரம்பிடித்த நாடும் கதிகூட நாளுந் துணைபுரியும் பாடும் திறன்யாவும் பாங்காய்த் தருவோனே -கலி விருத்தம்
Tweet media one
5
19
79
@KidambiGm
அழகரசன்
1 year
அலையி லுதித்த அரியை மணந்த அலையும் உயிர்க்கட் கரியோய் - நிலைமறந்த மன்னுயிர் செல்லலாம் மன்னுல கென்றென்றும் பின்னவ ளூடுயிர்க்குப் பேறு -வெண்பா
Tweet media one
7
11
84
@KidambiGm
அழகரசன்
1 year
தாமரைப் போதமர்த் தாதை யறியாத் துதிப்பொருளைத் தாமுறை யோதவே தாதையுங் கேட்ட தகப்பகுரு யாமுரை வேதமா யாண்டும் மகிழ்வா யிசைப்பதுவே தாமுறை யூதிடுந் தாரையை வேண்டிலோஞ் சாடிலோமே -கட்டளைக் கலித்துறை
Tweet media one
7
15
81